பாஸ் கட்சி அதன் மாநாட்டில் டிஎபியுடனான உறுவுகளை முறித்துக் கொள்ள எடுத்துள்ள முடிவைத் தொடர்ந்து பினாங்கு மாநில அரசில் தாம் வகித்து வரும் பதவிகளிலிருந்து விலகப் போவதாக பாஸ் கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார்.
“நான் அதற்கு கீழ்ப்படியாவிட்டால், நான் உலாமாக்களின் சொற்படி நடக்கவில்லை என்று அவர்கள் கூறுவார்கள்”, என்று மாட் சாபு இன்று அக்கட்சி மாநாட்டில் ஆற்றிய ஏளனமான உரையில் கூறினார்.
அவர் பினாங்கு நீர் கார்ப்பரேசன் மற்றும் பினாங்கு ஹலால் ஹப் ஆகியவற்றின் வாரிய உறுப்பினராக இருக்கிறார்.
கட்சித் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள கட்சியின் உலாமா தலைமைத்துவத்தை கடுமையாகச் சாடும் உரையை மாட் சாபு நிகழ்த்தினார்.
டிஎபியுடனான உறவை முறித்துக் கொள்ள பாஸ் எடுத்துள்ள முடிவு குறித்து கருத்துரைத்த பினாங்கு முதலமைச்சர் லின் குவான் எங், பாஸ் எடுத்துள்ள முடிவுக்கு ஏற்ப நன்னெறி அடிப்படையில் டிஎபியின் தலைமையில் இயங்கும் பினாங்கு மாநில அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாஸ் பிரதிநிதிகளும் பதவி துறக்க வேண்டும் என்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இன்று முன்னேரத்தில் தெரிவித்தார்.

























பாசின் மிக சிறந்த தலைவர்களுள் ஒருவர். வாழ்க வளமுடன்.
பித்தம் பிடித்த உலாமாக்களுக்கு வரும் பொதுத்தேர்தல் நல்ல பதிலடி கொடுக்கும்.!!!.
மாட் சாபு நல்லவர்தான். பினாங்கு மாநிலத்தில் நிறைய மலாய்க்காரர்களுக்கு அரசு பதவிகளை தந்துள்ளார் அதன் முதலமைச்சர் லிம் குவான் எங். ஆனால், நிறைய இந்தியர்கள் டி.எ.பி. கட்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டு, ஒன்றுமே இல்லாமல், ஓட்டாண்டியாக உள்ளனர்.அவர்களுக்கு எந்த ஒரு சிறு உதவியும் செய்யாமல், நடுத்தெருவில் விட்டவர் இந்த லிம் குவான் எங். ஆனால் பாரிசான் அப்படியல்ல, கட்சிக்காக பாடுபட்டவர்களை சும்மா விட்டதில்லை.