ஐஜிபியின் அதிகார வரம்பு மீறலை கடுமையாகச் சாடினார் சுரேந்திரன்

 

surendran lambasts IGPகோலாலம்பூரில் 1எம்டிபி விவகாரம் குறித்து விவாதிக்க விருந்த பொதுக் கருத்தரங்கை தடுத்து நிறுத்தியதற்காக போலீசாரின் நடவடிக்கைகளை படாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் கடுமையாக தாக்கிப் பேசினார்.

இது போலீஸ் படைத் தலைவரின் அதிகார வரம்பு மீறலுக்கான மிக அண்மைய சம்பவமாகும். நாட்டின் பாதுக்காப்புக்கு எதிரான உண்மையான அச்சுறுத்தல்களை, எல்லைப் பாதுகாப்பில் ஊழல் போலீசார் மற்றும் தடுப்புக் காவல் மரணங்களில் கட்டுப்பாடற்ற போலீசார் போன்றவை உட்பட, விட்டு விட்டு தமது கற்பனையில் தேசிய பாதுகாப்புக்கான மிரட்டலைக் காண்கின்றார் என்று பிகேஆரின் அரசியல் பிரிவின் உறுப்பினரான சுரேந்திரன் கூறினார்.pkr_n_surendran_01

மக்களின் ஏளனத்திற்கு போலீஸ் படையை தள்ளி விடாதீர் என்று அவர் ஐஜிபி காலிட் அபு பாக்கரை கேட்டுக் கொண்டார்.

ஓர் அரசு சார்பற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 1எம்டிபி பற்றிய கருத்தரங்கில் தலையிடுவது போலீசாரின் வேலையல்ல என்றாரவர்.