பாஸ்மா புதிய அரசியல் கட்சியா?

 

pasmaகடந்த வாரம் நடைபெற்ற பாஸ் முக்தாமாரில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து பெர்சாத்துவான் உம்மா செஜாதெரா மலேசியா (பாஸ்மா) என்ற அரசு சார்பற்ற அமைப்பு புதிய அரசியல் கட்சி தோற்றுவிப்பது பற்றி விவாதிக்கவிருக்கிறது.

இந்த என்ஜிஓவின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் பாஸ் முற்போக்குவாதிகள் இந்த சாத்தியம் குறித்து அடுத்த வாரம் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். பாஸ் கட்சியில் பாக்கத்தான் ஆதரவாளர்களான இவர்கள் நடந்து முடிந்த பாஸ் கட்சியின் தேர்தலில் மிதவாதிகளான உலாமாக்களால் ஒட்டுமொத்தமாக தோற்கடிக்கப்பட்டனர்.

“பாஸ்மா ஓர் என்ஜிஓ மட்டும்தான். அது ஓர் அரசியல் கட்சியாக்கப்பட வேண்டும் என்ற வற்புறுத்தல்கள் இருக்கின்றன.

“இது ஒரு மிகப் பெரிய முடிவு ஆகும். இது குறித்து ஜூன் 13 (சனிக்கிழமை) இல் எங்களுடைய வட்டமேசை கூட்டத்தில் விவாதிப்போம்”, என்று அந்த அமைப்பின் தலைவரான பரோல்ராஸி ஸாவாவி கூறினார்.