பினாங்கு அரசு, சாபாவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக ரிம100,000 கொடை வழங்க எண்ணியுள்ளது.
வழக்கமாக புதன்கிழமைகளில் கூடும் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் இப்பரிந்துரையை முன்வைக்கப்போவதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
அந்நிலநடுக்கத்தில் சிங்கப்பூர் பள்ளி மாணவர்கள் 10பேர் உள்பட, 13 பேர் உயிரிழந்ததற்கு லிம் இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.
வாழ்த்துகள்!!! தொடரட்டும் உங்கள் சேவை!!! அதே வேளையில், ஹாடி அவாங் முஹிடினுடன் குசலம் விசாரிக்க சாபாவுக்கு பதுங்கிச் சென்றுள்ளார் என்ற செய்தி காதில் எட்டியுள்ளது!!!! அம்நோவுடன் கூட்டு அரசாங்கத்துக்கு பாலம் போடுகிறாரோ???
சிற்றெரும்பு சார்! தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. “பேரு பெத்த பேரு, தாக நீலு லேது”. பினாங்கில் இந்தியர்கள், சிறுதொழிலும், அங்காடி வியாபாரமும் சரிவர செய்ய முடிவதில்லை. அதை முதலில் கவனிக்கச் சொல்லுங்கோ!
வாழ்த்துகள் லிம் குவான் எங் அவர்களே தொடரட்டும் உங்கள் சேவை.
அண்மைய கேமரன் மலை வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்கள் நிறைய பேர் இந்தியர்கள். பினாங்கு அரசு அங்கே சல்லிக் காசு கொடுக்கவில்லை. சாபா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலோர் சிங்கப்பூர் சீனர்கள். லிம் குவான் எங் எப்படிப்பட்ட ஆசாமி என்பதை இன்னும் சில மாதங்களில், இந்தியர்கள் புரிந்து கொள்வர்.
பிரச்சனையை முறையே கொண்டுச் சென்றால் தீர்வு காண வழி உண்டு. எனக்கு அது வேணும்.. இது வேணும் என்று தெருவில் நின்று கத்தினால் மட்டும் போதாது. வணிகர்கள் சங்கத்தின் மூலம் முறையாக வேண்டுகோள் விடுக்கட்டும்.என்ன பதி வருகிறது என்று பார்ப்போம். இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லையென்றால் எமக்கும் வேதனைதான் அன்பரே!!! பினான்ன்கு அரசு பி என் அரசைப் போன்றது அல்ல அன்பரே!!!
ஜ.செ.க. இருக்கும் இந்திய அரசியல் தலைவர்கள் எதை புடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்?. வெட்டிப் பேச்சி வீரசாமியாக இருந்தால் மட்டும் போதாது. இவர்களால் இந்தியர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதே கேள்வி? அப்படி இவர்களால் இந்தியர்களுக்கு உருப்பிடியாக எதையும் செய்ய முடியவில்லை என்றால் அடுத்த தேர்தலில் இந்தியர்களிடம் ஒட்டு கேட்டு வரவேண்டாம்.