சாபாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பலமான நிலநடுக்கத்தை அடுத்து இன்று பல இடங்களில் சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இன்று காலை கோத்தா பெலுட்டில் ரிக்டர் கருவியில் 3.0 என்று பதிவான பலவீனமான நிலநடுக்கம் ஒன்று நிகழ்ந்ததாக மலேசிய வானியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
ராணாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
லாபுவானுக்கு வடகிழக்கே 90 கிலோ மீட்டரில் 3.2 எனப் பதிவான நிலநடுக்கம் ஒன்று இன்று காலை நிகழ்ந்திருக்கிறது
























