எதிர்காலம் குறித்து விவாதிக்க பிகேஆர், டிஎபி, பாஸ் சந்திப்பு

 

meetingtodiscussfutureடிஎபி மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான உறவு குறித்து விவாதிக்க பிகேஆர் அக்கட்சிகளை விரைவில் சந்திக்கும் என்று பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குனர் ஃபாமி ஃபாட்ஸில் இன்று கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாஸ் கட்சி அதன் முக்தாமாரில் டிஎபியுடனான அதன் உறவை முறித்துக்கொள்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

பிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்றம் இவ்விவகாரத்தை இன்னும் விவாதித்து வருவதால், அச்சந்திப்பிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றாரவர்.

மலேசிய அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு இரு-கட்சி அமைவுமுறையில் தங்களுடைய நம்பிக்கையை வைத்து அதற்கு கடந்தPKR-Aziza only for MB 13 ஆவது பொதுத் தேர்தலில் 52 விழுக்காட்டு வாக்காளர் வாக்களித்தனர் என்பதை  அவர் சுட்டிக் காட்டினார்.

ஆகவே, பிகேஆர் அதன் போராட்டத்தை பாக்கத்தான் ரக்யாட் அமைப்பிற்குள்ளேயே தொடர முயற்சிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

பெட்டாலிங் ஜெயாவில், பிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்றத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு பின்னர் பேசிய பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கூடிய விரைவில் பாஸ் மற்றும் டிஎபி ஆகியவற்றுடன் நாடாளுமன்றத்தில் சந்திப்பு நடத்துவோம் என்றார்.