குடியுரிமை பிரச்சனையை தீர்க்க மறுத்தால் சட்ட நடவடிக்கை – ஹிண்ட்ராப்!

red ICஐம்பது ஆண்டுகளுக்கும்  மேலாக  குடியுரிமை பிரச்சனை இந்தியர்களை ஆட்டிப்படைக்கிறது.  அரசாங்க சிறப்பு பணிப்பிரிவான  இதற்கு காரணம் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள்  அரசாங்க அளவிலுள்ள கொள்கை சிக்கல்கள் எவையும் அணுகவேயில்லை  என்கிறார்  ஹிண்ட்ராப்  ஆலோசகர் என். கணேசன்.மலேசிய நாட்டில்இனவாத முறையில்    செயல்பட்டு  வரும் அரசியல் அமைப்புதான் இதற்கான காரணம்.

எவ்வளவுக்கு எவ்வளவு இந்திய ஜனத்தொகையை  குறைக்கமடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு குறைப்பதற்கு இது ஒரு வழியாக ஆகிவிட்டது. ஹிண்ட்ராப் நிரந்திர தீர்வு ஆலோசனைக்கு பின் இந்த பாரிசான் அரசாங்கம்  இதுவரை இந்த பிரச்சனைக்கு  தீர்வு  காணாமல் இருப்பதிற்கு இதுதான் காரணம்.

IC DHRR 2003 முதல் 2013 வரையில் ட்ரா (DHRR) என்ற இயக்கம் பதுவு செய்த 7,085 விண்ணப்பங்களில் 5,425 மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளது. பிரதமர் நஜிப் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியர்களுக்கான சிறப்பு பணிக்குழுனான Special Implementation Task Force for Indian Community பதிவு செய்த 14,385 விண்ணப்பங்களில் 6.590 மட்டுமே தீர்க்கப்பட்ட்து. ஆக மொத்தம் 21,470, அதில் 12,915 அல்லது 56 சதவிகிதமே தீர்கப்பட்டது. அதாவது பாதிக்கு பாதிதான் கடந்த 12 வருடங்களாக அரசாங்கத்தின் ‘தீவிரமான’ தீட்டங்களால் தீர்க்கப்பட்டது எனலாம்.

மேல்கூறியுள்ள இயக்கங்களின் புள்ளி விவரங்களை  பார்த்தால் சில உண்மைகள்  தெரியவருகின்றன.

அவர்கள் காட்டும் புள்ளி விவரங்கள் முழுமையானவை இல்லையினும் அது  பதம் பார்க்கும் அளவில் நமக்கு உதவுகின்றது என்கிறார் கணேசன்.

IC SITFஇவை ஒன்றும் தீர்க்க முடியாத சிக்கலான பிரச்சினகள் அல்ல. அரசு மனது வைத்தால் இவை சுலபமாக நிச்சியமாக நல்ல வழியில் முடிவு காணலாம். அரசாங்கம் இதை ஒத்துக்கொள்ளாத வரை, இந்த பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு கிடைக்கவே  கிடைக்காது என்கிறார் கணேசன்.

மலேசிய ஏழை இந்தியர் பிரஜா உரிமை அற்றவர்களின் பிரச்சனையைத் தீர்க்க அர்சமைப்புக்கு உட்பட்ட வகையில் ஹிண்ட்ராப் தனது 2013-இன் தேர்தலுக்கு முன் பாரிசானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முன்மொழிந்த வழிமுறைகள் வருமாறு.

முதலாவது, மலேசியாவில்  வாழும் அத்தனை பிரஜா உரிமை அற்ற இந்தியர்கள், பிறப்பு பத்திரம் இல்லாத இந்தியர்கள்,  நீல அடையாள அட்டை இல்லாத இந்தியர்கள், சிகப்பு அடையாள அட்டை கொண்ட இந்தியர்களின் புள்ளி விவர எண்ணிக்கை முதலில் பெறப்பட வேண்டும்.

இரண்டாவது, இந்நாட்டில் பிறந்து  இந்நாட்டில் வாழ்ந்தாலும் பல மலேசிய இந்தியர்கள் தகுந்த ஆவணங்கள் கொண்டிருக்கவில்லை . அப்படிபட்டவர்களின் நிலையை ஆராய சாதாரண முறையோடு வெளிப்படையான வகையில் அவர்களின் நிலையை விசாரிக்க வேண்டும்.

red Ic 2மூன்றாவது,  அப்படி மலேசிய பிரஜா உரிமை அற்ற நபர் இந்நாட்டில் தான் பிறந்ததாகக் கூறினால், அவரின் பிறந்த தகவல்களை அறிந்து ஒரு சமுக அந்தஸ்து பெற்ற நபர் வழங்கும் சத்திய பிரமான பத்திரத்தை சம்பந்தப்பட்ட இலாகா பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்காவது,  மலேசியாவில் வாழும் பல்லாயிர சிகப்பு அடையாள அட்டை மலேசிய இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்க்க ஒரு முகப்படுத்தப்பட்ட வெளிப்படையான ஒரு தீர்வு தேவைப்படுகிறது.

ஐந்தாவது, மலேசிய பிரஜா உரிமைக்கு மனு போடும் மலேசிய இந்தியர்கள், பிரஜா உரிமைக்கு உரிமை பெற்றவர்களா, இல்லையா என்பதை தீர்மானிக்க ஒரு முறையாக வடிவமைக்கப்பட்டு 2013 முதல் 2018 வரையிலான்ன அமலாக்கம் காண வேண்டும் என்று .

Hindraf Mouஇவை ஹிண்ட்ராப் அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன் படிக்கையில் உள்ளதால் இதை உடனடியாக அமுலாக்கம் செய்ய வேண்டும். இது சார்பாக உள்துறை அமைச்சுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது என்கிறார் கணேசன்.

இது ஓர் அழைப்பு மட்டுமல்ல, இதை உடனடியாக செயலாக்கம் செய்ய மறுத்தால், அர்சாங்கம் பாரிசான் – ஹிண்ட்ராப் ஒப்பந்தத்தை அத்து மீறல் செய்ததாக கருதப்படும், அது சட்ட நடவடிக்கைக்கு கொண்டு செல்லும் என்று கோடி காட்டுகிறார் கணேசன்.