1எம்டிபி வாரியம் பதவி விலகுமாம்

mdb1மலேசியா  மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின்  இயக்குனர்  வாரியம் ஜூலை  மாத வாக்கில்  பதவி  விலகுமாம். அடையாளம்  கூறப்படாத  வட்டாரங்களை  மேற்கோள்காட்டி  தி எட்ஜ்  நிதியியல்  நாளேடு  இவ்வாறு தெரிவித்துள்ளது.

இயக்குனர்  வாரியத்தைப்  பதவிதுறக்கச்  சொல்வது  யார்  அல்லது  எந்த  அமைப்பு  என்பதை அது  தெரிவிக்கவில்லை.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தலைவராகக்  கொண்ட  1எம்டிபி  அலோசனை  வாரியமும்கூட பதவி விலகும்  என  அடையாளம்  கூறப்படாத  ஒரு  வட்டாரத்தை  மேற்கோள்காட்டி தி  எட்ஜ்  கூறிற்று.

இச்செய்தி மீது  1எம்டிபி-இன்  பேச்சாளர்  கருத்துரைக்க  மறுத்து  விட்டார்.

– Reuters