கடந்த வாரம் பாஸ் முக்தாமாரில் டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளபோவதாக வீறாப்புப் பேசியதெல்லாம் கட்சித் தேர்தலில் உயர் பதவிகளை வெற்றி பெறுவதற்காகப் போடப்பட்ட நாடகமாகும் என்று கூறுகிறார் தோல்வியுற்ற முன்னாள் துணைத் தலைவர் முகம்மட் சாபு.
கட்சியில் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கிணங்க டிஏபி தலைமையில் செயல்படும் பினாங்கு அரசாங்கத்தில் தாம் வகித்த பதவிகளைத் துறக்கப்போவதாக அறிவித்த மாட் சாபு இப்போது எல்லாமே நாடகம் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது என்றார்.
“இப்போது தெரிகிறது. அன்வாரின் கையாள்கள், டிஏபியின் கைக்கூலிகள் என்று முத்திரையிட்டதெல்லாம் பதவியைப் பிடிப்பதற்கான தந்திரம் என்பது.
“பதவி கைக்கு வந்து விட்டதால் இப்போது டிஏபிக்கு நல்லபிள்ளையாவதற்கு வழி தேடுகிறார்கள். ஐயகோ, பக்கத்தான் ரக்யாட்டை உருவாக்கி வளர்ப்பதற்கு உதவியர்கள் எல்லாம் வெள்யில் துரத்தப்பட்டு விட்டார்களே”, என்றாரவர்.
“ஆக, பதவிக்காகத்தான் அலைந்தார்களா?”, என்று மாட் சாபு சாடினார்.
உண்மையான மக்கள் பிரதிநிதிகள் யாரென்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். பாஸ் கட்சியின் அரசியல் எதிர்காலமும் மக்கள் கையிலே. இஸ்லாமை மையமாக கொண்டுள்ள பாஸ் கட்சி தமது சக தலைவர்களை முதுகில் குத்துவதைப் பார்த்தால் இஸ்லாமுக்கே அவமானமாய் இருக்கிறது!!!! என்ன செய்வது? சமயமும் அரசியலுக்கு விலைபோகிறது போலும்!!!
பதவி மோகம் வந்துவிட்டால்,,,,,,, பலர் மதம் ,,, சமயம் என்ன ,,,,மனைவி மக்களை கூட படிகட்டாக பயன்படுத்த தயங்கமாட்டார்கள் ,,,,நீ சற்று சோடை போய்விட்டாய் ,,,, அதனால் இப்பொழுது ஓலம் இடுகிறாய் ,,,,,
அட அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா விடுங்கள் . அது சரி, நீங்கள் எந்த பக்கம்?