நஜிப்: பாஸுடன் பேச்சு நடத்த அம்னோ தயார்

talkபாஸ்  கட்சி அண்மையில்  அதன்  கட்சித்  தேர்தலில்  தலைவர்களைத்  தேர்ந்தெடுத்துள்ள  வேளையில், அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்  கட்சி முஸ்லிம்களுக்கு  நன்மையளிக்கும்  விவகாரங்களை  பாஸுடன் விவாதிக்க  ஆயத்தமாக  இருப்பதாய்க்  கூறினார்.

“மக்களின் நன்மைக்காக  புதிய  பாஸ்  தலைமையுடன்  ஒத்துழைப்பது பற்றிப்  பேச  அம்னோ  தயாராகவுள்ளது”, எனப்  பிரதமர்  கூறியதாக உத்துசான்  இணையத்தளச்  செய்தி  தெரிவிக்கிறது.

அப்படியானால்  அம்னோ  பாஸுடன்  சேர்ந்து  அரசாங்கம்  அமைக்குமா  என்று  கேட்டதற்கு  ஒத்துழைப்பு  என்கிறபோது  அதைத்  குறிப்பிட  வேண்டிய  அவசியமில்லை  என்றார்.

இதனிடையே,  நேற்று  சாபாவின்  ராணாவில், பாஸ் தலைவர்  அப்துல் ஹாடி  ஆவாங்கும்  இளைஞர்  தலைவர்  நிக்  அப்டு-வும்  நிலநடுக்க மீட்பு  நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுக்  கொண்டிருந்த  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினுடனும்  மற்ற  ;பிஎன்  தலைவர்களுடனும்  காணப்பட்டதாக  ஸ்டார்  ஆன்லைன்  செய்தி  கூறிற்று..