‘உறவுத் துண்டிப்பு’தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய அன்வார் வேண்டுகோள்

tiesபக்கத்தான்  ரக்யாட்டின் நடப்புகளால்  கவலையடைந்துள்ள  பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார்  இப்ராகிம்,  அண்மையில் பாஸ்  முக்தாமாரில்  டிஏபியுடனான  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளக்  கொண்டுவரப்ப்பட்ட  தீர்மானத்தை  பாஸ்  மறுசீலனை  செய்ய  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்று  பாடாங்  செராய்  எம்பி  என்.சுரேந்திரன்  வழி  விடுத்த  அறிக்கையில் அன்வார், பாஸ், டிஏபி, பிகேஆர்  ஆகியவற்றுக்கிடையிலான அரசியல்  ஒத்துழைப்பில்   ஏற்பட்டுள்ள  மாற்றங்களால் மிகவும்  கவலையுற்றிருப்பதாகத்  தெரிவித்தார்.

“விவாதத்துக்கு  விடப்படாமல்  ஏற்றுக்கொள்ளப்பட்ட  அத்தீர்மானத்தை பாஸ்  மறுபரிசீலனை  செய்ய  வேண்டும்  என்றும்  இப்போதைக்கு அதை  அமல்படுத்த  வேண்டாம்  என்றும்  கேட்டுக்கொள்கிறேன்”,  சுங்கை  பூலோ  சிறையில்  உள்ள  அன்வார்  அந்த  அறிக்கையில்  கூறினார்.