நஜிப்: என் ‘பெரிய சீர்குலைவு’க்குக் காரணமே மகாதிர்தான்

messபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், தம்முடைய  தலைமைத்துவத்தில்  ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும்  ’பெரிய  சீர்குலைவு’க்குக்  காரணமே  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்தான்  என்று  கூறினார்.

“துன்  குறிப்பிடும்  சீர்குலைவு  அவரது  கைங்கரியதால்  ஏற்பட்டது. அவரால்  சாடல்களால்  எதிரணியினரின்  பொய்களையும்  அவதூறுகளையும்  அப்படியே  எடுத்துரைப்பதால்  விளைந்தது.

“அக்குற்றச்சாட்டுகளை  இணையத்தளம்  மேலும்  ஊதிப்  பெரிதாக்கி  விட்டது”, என  நஜிப்  தம்  வலைப்பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.