பிரதமர்: 1எம்டிபி பணச்சலவை செய்ததா? நான் அறியேன்

launder1எம்டிபி கருப்புப்  பணத்தை  வெள்ளைப் பணமாக்கும்  பணச்  சலவை  நடவடிக்கைகளில்  ஈடுபட்டதாகக்  கூறப்படுவது பற்றித்  தமக்கு  எதுவும்  தெரியாது  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறுகிறார்.

“பணச்சலவை  நடந்திருப்பதாக  சில  தரப்பினர்  குற்றம்  சுமத்துவதைத் தலைமைக்  கணக்காய்வாளரும்  பொதுக் கணக்குக்  குழுவும்தான்  கண்டுபிடித்துக்  கூற  வேண்டும்.

“ஆனால், 1எம்டிபி பணச்சலவை  செய்ததா  என்பது  எனக்குத் தெரியாது  என்பதைத்  தெரிவித்துக்  கொள்கிறேன்.

யாராவது  பணச்சலவை  செய்தது  கண்டுபிடிக்கப்பட்டால்  அவர்கள்  நீதிமுன்  நிறுத்தப்படுவார்கள்”, என  நஜிப்  தம்  வலைப்பதிவில்  கூறினார்.

மே 28-இல், முன்னாள்  பிரதமர்  மகாதிர்  முகம்மட்  1எம்டிபி பணச்சலவை  நடவடிக்கையில்  ஈடுபட்டது உண்டா  என்று  கேள்வி  எழுப்பியிருந்ததற்கு  நஜிப்  இவ்வாறு  எதிர்வினை  ஆற்றியிருந்தார்.