மலேசிய விமான நிறுவனம் அதன் பணியாளர்களுக்குக் கொடுத்த பணிமுடிப்புக் கடிதங்களை 48-மணி நேரத்தில் மீட்டுக்கொள்ளாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மலேசிய விமானப் பணியாளர் தேசிய சங்கம் (நுபாம்) அறிவித்துள்ளது.
அதைக் “கருவிகளைத் தொடாத கண்டன நடவடிக்கை” என்று வருணித்த நுபாம் தலைவர் இஸ்மாயில் நசருடின் அதற்கு மேல் விவரிக்கவில்லை.
“பொறுத்திருந்து பாருங்கள். எங்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுங்கள்”, என்றவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
எம்ஏஎஸ் “கருவிகள் தொடா”க் கண்டனத்துக்கு மதிப்பளிக்காவிட்டால் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் அல்லது தேசிய கருவூலத் தலைமையகத்துக்கு வெளியில் அதைவிட பெரிய கண்டனக் கூட்டத்துக்கு நுபாம் ஏற்பாடு செய்யும்.
கருவூலமே எம்ஏஎஸ்-ஸின் உரிமையாளர்.
மகாதிர் என்ன சொல்லபோகிறார்.குட்டையை குழப்புவார்.
MAS – இழப்புக்கு காரணம் ஊழல்-தில்லு முள்ளு- அத்துடன் தரம் திறன் இல்லா தலைமைத்துவம்- அரசியல் தலை ஈடு– ஏமாற்று வேலை– இன்னும் எவ்வளவோ– அங்கு தகுதி பார்த்து வேலை கொடுப்பதில்லை–தோல் மட்டுமே முக்கியம். பிறகு எப்படி? இதெல்லாம் காகாதிமிரின் கைங்கரியம்.
மாமாதிர் உருவாக்கினார் , இன்று சப்பாணி அவஸ்தை படுகிறார்.நல்ல போய்கிட்டு இருகிதுங்கோ நாடு.
எம்ஏஎஸ் சில் , அம்னோ தலைவர்களை வேலைக்கு அமர்தாதிர்கள் ! அங்கு யூனியன் செய்யும் கோளாறே அனைத்துக்கு காரணம் !
பொருது இருந்து பரோபோம்
–
பொறுத்து இருந்து என்னாத்தை பார்க்கிறது? இவன்கள் என்றுமே மாற போறதில்லை– எல்லாம் மலாய் காரன் மயம்- திறமைக்கு அங்கு என்றுமே மதிப்பில்லை.
நீங்கள் சொல்லுவது நியாயம் என்றே வைத்துக் கொள்ளுவோம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிறுவனம் மாபெரும் நஷ்டத்தை நோக்கிப் போய் கொண்டிருக்கும் போது வாயை மூடிக்கொண்டு நீங்கள் உல்லாசத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தீர்களே அப்பொழுதே உங்களுடைய ஆட்சேபத்தைத் தெரிவித்திருக்கலாமே? வேலை நிறுத்தம் செய்திருக்கலாமே? முடிந்தவரையில் எல்லாருமே திருட்டுத்தனம் பண்ணிவிட்டு இப்போது என்ன ………?