ரோஸ்மா பெர்மாத்தாவின் புரவலர் மட்டுமே அதன் தொடர்பில் முடிவு செய்பவர் அல்ல

permataபிரதமரின்  துணைவியார் ரோஸ்மா  மன்சூர்  அரசாங்க  நிதியுதவியுடன்  நடக்கும்  பெர்மாத்தாவின்  முன்னேற்றத்துப்  பாடுபடுகிறாரே  தவிர  அது  என்ன  செய்யலாம், செய்யக்கூடாது  என்றெல்லாம்  முடிவு  செய்பவர்  அல்லர்.

பெர்மாத்தாவை  நிர்வகிப்பதும்  அதன்  கொள்கைகள்  பற்றி  முடிவெடுப்பவர்களும்  அரசு  அதிகாரிகளே  என்கிறார்  பிரதமர்துறை  அமைச்சர்  ஷஹிடான்  காசிம்.

ரோஸ்மா, நான்கு வயதுக்குக்  குறைவான  குழந்தைகளுக்குக்  கல்வி புகட்டும்  திட்டமான  பெர்மாத்தாவின்  புரவலர், அவ்வளவுதான்.

“புரவலரின்  பணி  நிர்வாகம், நிதி, மேலாண்மை  போன்ற  விவகாரங்கள்  சம்பந்தப்பட்டதல்ல. அந்த  அதிகாரத்தைக்  கொண்டிருப்பவர்கள்  அரசு  அதிகாரிகள்”, என  ஷஹிடான்  நாடாளுமன்றத்தில்  எழுத்துப்பூர்வமான பதிலில்  கூறினார்.