துப்பாக்கித் தோட்டா மருட்டலைப் போலீஸ் புலனாய்வு செய்கிறது

அரசியலமைப்பு சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரிக்கு  துப்பாக்கித் தோட்டா அனுப்பப்பட்ட விவகாரத்தை போலீஸ் புலனாய்வு செய்கிறது. அடையாளம் தெரியாத தொடர்புகள் மூலம் கிரிமினல்  அச்சுறுத்தல் அல்லது குற்றவியல் சடத்தின் 507வது பிரிவின் கீழ் அந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறது.

அஜிஸ் பேரியின் கோம்பாக் இல்லத்துக்கு நேற்று ஒரு கடிதத்துடன் துப்பாக்கித் தோட்டாவும் அனுப்பப்பட்டது.

அந்தக் கடிதத்தில். “Jangan kurang ajar dengan sultan maut nanti” (சுல்தானிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள வேண்டாம், உயிர் போய்விடும்) என்று எச்சரிக்கப்பட்டிருந்ததாக அப்துல் அஜிஸ் சொன்னார்.

ஒரு சாதாரண  கடித உறையில் இருந்த கடிதமும் துப்பாக்கித் தோட்டாவும் காலை மணி 11.45-க்கு ஒரு அஞ்சல்காரரால் அவரிடம் சேர்ப்பிக்கப்பட்டன.

“நான் நேற்று அது குறித்து தைப்பிங்கில் போலீசில் புகார் செய்தேன். இன்று நான் கூடுதல்  விவரங்களை அறிந்துள்ளேன். கோம்பாக் போலீஸ், மேலும் புலனாய்வு செய்வதற்காக அந்தத் துப்பாக்கித் தோட்டாவை எடுத்துச் சென்றுள்ளது,” என அவர் மலேசியாகினியிடம் சொன்னார்.

“நான் என் வாக்குமூலத்தை கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இன்று வழங்கினேன். நோர் பாடில்லா என்னும் இன்ஸ்பெக்டர் ஒருவர் என் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.”

போலீஸ் தமக்கு எதிரிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதையும் அந்தத் தோட்டா கிடைத்த பின்னர் தைப்பிங்கிற்கு புறப்பட்டுச் சென்றதற்கான காரணத்தையும் போலீஸ் வினவியதாக அஜிஸ் பேரி மேலும் கூறினார்.