அரசாங்கம் மனிதக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விடும்

1mustafaஅரசாங்கம்  மனிதக்  கடத்தல்  சட்டத்தில்  சில  திருத்தங்கள்  செய்து   மனிதக் கடத்தலைத்  தடுக்கும்  நடவடிக்கைகளை முடுக்கி  விட  திட்டமிடுகிறது. இதன்வழி அமெரிக்க  வெளியுறவு  அமைச்சின்  மனிதக்  கடத்தல்  மீதான   அறிக்கையில்  அடுக்கு 3-இல்  இடம்பெற்றுள்ள  மலேசியா  இரண்டாம்  அடுக்குக்கு  முன்னேற  முடியும்  என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதக் கடத்தல்  சட்டத்திலும்  குடியேறிகள்  கடத்தல்  சட்டத்திலும்  திருத்தங்கள்  செய்வதற்கு  வகை  செய்யும்  சட்டவரைவு  இன்று  11வது  மலேசியா  திட்டம்  இரண்டாவது  வாசிப்புக்கு  வரும்போது  தாக்கல்  செய்யப்படும்  என்று  அனைத்துலக  வர்த்தக, தொழில்  அமைச்சர்  முஸ்டபா  முகம்மட்  நாடாளுமன்றத்தில்  கூறினார்.

மலேசியா  அடுக்கு 3-இல்  இருப்பது  பசிபிக்  கடலோர  நாடுகளின்  பங்காளித்துவ  உடன்பாடு(டிபிபிஏ)  தொடர்பான  பேச்சுகளைப்  பாதிக்கும்  என  முஸ்டபா  தெரிவித்தார்.

“அடுக்கு மூன்றில்  இருப்பதால்  சில  சிக்கல்கள். அமெரிக்க  செனட்டர்  ஒருவர் மூன்றாம்  அடுக்கு  நாடுகளை டிபிபிஏ  பேச்சுகளில்  சேர்த்துக்கொள்ளக் கூடாது  என்ற  அலோசனையை  முன்வைத்துள்ளார்”, என்றாரவர்.