‘ரோஸ்மா வைத்திருப்பது ரிம820,000 கைப்பை அல்ல’

rosmah bagரோஸ்மா  மன்சூரின் கைப்பையும்  ஒர்  ஏல  விற்பனையில் ரிம820,000-க்கு  விற்கப்பட்ட  ஹெர்மிஸ்  பிர்கின்  கைப்பையும்  ஒன்றல்ல என  அவரின்  உதவியாளர்  ரிஸால்  மன்சூர்  கூறினார்.

அதே  போன்ற  கைப்பையை  ரோஸ்மா  வைத்திருப்பதையும்  கைப்பை  ஏலத்துக்கு  விடப்பட்ட  நிகழ்வையும்  காண்பிக்கும்  படம்  இணையத்தளத்தில் உலா  வந்து  கொண்டிருப்பது  பற்றி  அவர்  கருத்துரைத்தார்.

“அதைப் பார்க்கையில் அந்தக் கைப்பையை  வாங்கியவர்  ரோஸ்மாதான்  என்ற  எண்ணம்  வரலாம்”, என  ரிஸால்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

ஆனால், சோதித்துப்  பார்த்ததில் ரோஸ்மா  வைத்திருப்பது  ஹெர்மிஸ்  பிர்கின்  கைப்பை  அல்ல  என்று  தெரிய  வந்ததாக  ரிஸால் கூறினார்.

“(ரோஸ்மா) கைப்பை  வைத்துள்ள  படம்  நான்காண்டுகளுக்கும்  முன் கோலாலும்பூர்  அனைத்துலக விமான  நிலையத்தில்  எடுக்கப்பட்டது  என்பது  தெரிய  வந்தது.

“ஆனால், வால் ஸ்ட்ரிட்  ஜர்னலில் அந்த  ஹெர்மிஸ்  பிர்கின்  கைப்பை  ஏலத்துக்கு  விடப்பட்டது  2015  என்று  கூறப்பட்டிருந்தது.

“அப்படியானால்  ரோஸ்மா   வைத்துள்ள  கைப்பையும்  புகைப்படத்தில்  காணப்படும்  கைப்பையும்  எப்படி  ஒன்றாக  இருக்க  முடியும்?”, என்றவர்  வினவினார்.

ஏஎப்பி  செய்தியின்படி  முதலை  தோலால் ஆன  அக் கைப்பை  யுஎஸ்$222,912-க்கு  ஏலம்  விடப்பட்டதாம். ஆசிய  நாட்டைச்  சேர்ந்த  ஒருவர்தான்  தொலைபேசிவழி  அதை  வாங்கினாராம்.

ஆனால், அவரின்  பெயர்  தெரிவிக்கப்படவில்லை. அது  யார்  என்பது  மர்மமாக  இருக்கிறது.