நஜிப்: மகாதிருடன் பொதுவில் வாதமிடுவது நன்றாய் இராது

debateமுதல்  தடவையாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கடந்த  வெள்ளிக்கிழமை 1எம்டிபி  கலந்துரையாடலில்  கலந்துகொள்ளாததற்கான  காரணத்தை  விளக்கியுள்ளார். அறைக்குள் நடப்பதாக  இருந்த  கலந்துரையாடல்  பொது  விவாதமாக  உருமாறியதுதான்  காரணமாம்.

‘ஒளிப்பதற்கு  ஒன்றுமில்லை’  என்ற  தலைப்பிடப்பட்டிருந்த  அந்நிகழ்வில்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுடன்  தாம்  பொதுவில்  விவாதமிடுவது  முறையாகாது  என  நஜிப்  கூறினார்.

“மூடிய  அறைக்குள்  நடப்பதாக  இருந்த  நிகழ்வு  பொது  விவாதமாக  உருமாறியது. இதனால்  மகாதிரும்  நானும்  பொதுவில்  நேருக்கு  நேர் மோதிக்கொள்ளும்  நிலை  ஏற்பட்டிருக்கும்.

“பிரதமர்  என்ற  முறையில்  நான்  என் கட்சியைச்  சேர்ந்த  ஒரு  முன்னாள் பிரதமருடன்  பொதுவில் வாதமிடுவது  முறையாகாது”, என  நஜிப்  அவரது  வலைப்பதிவில்  கூறினார்.