பாஸ் பினாங்கிலும் சிலாங்கூரிலும் அரசுப் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது

resபாஸ்  கட்சியின் இரண்டு  முக்கிய  புள்ளிகள்  அரசுப்  பதவிகளிலிருந்து  விலகியிருக்கலாம். ஆனால், அக்கட்சியில்  உள்ள  பலர்  அவ்விருவரையும் முன்மாதிரியாகக்  கொள்ளத்  தயாராக  இல்லை.

முன்னாள்  பாஸ்  துணைத் தலைவர்  முகம்மட்  சாபுவும்  மத்திய செயல்குழு  உறுப்பினர்  முஜாஹிட்  யூசுப்  ராவாவும்  டிஏபியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ள  முக்தாமாரில் கொண்டுவரப்பட்ட  தீர்மானத்துக்கு மதிப்புக்  கொடுத்து  பினாங்கு அரசில் அவர்கள்  வகித்து  வந்த பதவிகளைத்  துறந்தனர்.

ஆனால்,  சுபாங்  ஜெயா  முனிசிபல்  மன்ற  உறுப்பினரான பாஸ்  கட்சியைச்  சேர்ந்த இஸ்ஹாம்  ஹாஷிம்  உடனடியாக  அப்படி  நடந்துகொள்ள  வேண்டிய  அவசியமில்லை  என்றார். எதிலும்   எச்சரிக்கையாக  இருக்க  விரும்புகிறாராவர்.

“முற்போக்காளர்களான  நாங்கள்  என்ன  முடிவு  செய்தாலும்  ஒன்றுகூடித்தான்  செய்வோம்”,  என்றார்.

அடுத்த  கட்ட  நடவடிக்கை  குறித்து “முற்போக்காளர்கள்”  தங்களுக்குள்  விவாதித்து  வருவதாகக்  கூறினார்.

ஆனால், “முபோக்காளர்கள்”  தரப்பில் யாரெல்லாம் இருக்கிறார்கள்  என்பதை  அவர்  தெரிவிக்கவில்லை.