அம்னோவுடன் தேநீர் அருந்தினால் அவர்களுடன் ஒன்றிணைகிறோம் என்று அர்த்தமல்ல

idrisபாஸ்  கட்சியினர்  அவர்களின்  தலைவர்கள்  அம்னோவுடன்  கைகோக்க  விரும்புகிறார்கள்  என்று  குற்றஞ்சாட்டக் கூடாது  என  எச்சரிக்கை  விடுத்துள்ளார்  புதிய  உதவித்  தலைவர்  இட்ரிஸ்  அஹ்மட்.

பாஸ்  தலைவர்கள்  ஜன்ம பகைவர்களான  அம்னோவுடன்  அமர்ந்து  தேநீர்  அருந்துவதை  வைத்து  உறுப்பினர்கள்  அவசரப்பட்டு  அப்படி ஒரு  முடிவுக்கு  வந்து விடக்கூடாது  என்றாரவர்.

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்,  அம்னோவுடன்  ஒத்துழைப்பதை  விரும்புகிறார்  என்பது  கட்சியில்  அவருக்குள்ள  ஆதரவைக்  கண்டு  பொறாமை  கொண்டுள்ளவர்களால்  கூறப்பட்ட  ஒரு  குற்றச்சாட்டு  என  இட்ரிஸ்  குறிப்பிட்டார்.

“நீங்கள்  தெரிந்துகொள்ள  வேண்டும்  என்பதற்காக  சொல்கிறேன். முன்பே  அம்னோ தலைவர்கள் கைகோக்க விருப்பி ஹாடிக்கு  அழைப்பு  விடுத்தனர். அதற்கு  ஹாடி  பாஸ்  அம்னோவில்  சேராது,  பக்கத்தான்  ரக்யாட்டில்தான்  இருக்கும்  என்று  திட்டவட்டமாக  கூறிவிட்டார்”, என்றாரவர்.