மகாதிர்: பிரதமர் பதவி விலகி, குற்றமற்றவர் என நிரூபித்து மீண்டும் பிரதமராகலாம், பிரச்னை இல்லை

returnமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட், நஜிப்  அப்துல்  ரசாக்  மீண்டும்  பிரதமராவதை  ஆட்சேபிக்கவில்லை. ஆனால்,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தில்  எந்தத்  தவறும்  நிகழவில்லை  என்பது   நிரூபிக்கப்பட  வேண்டும்.

ஆனால், அதற்குமுன்  1எம்டிபி  நிதி  விவகாரங்களில்  முழு  புலனாய்வு  நடப்பதற்கு  வழி  வகுத்து  நஜிப்  பதவி  விலக  வேண்டும்  என்றும்  அவர்  சொன்னார்.

“எந்தத்  தவறும்  கண்டுபிடிக்கப்படாமல்  எல்லாப்  பணமும்  திரும்பக்  கிடைக்கும்  பட்சத்தில் நஜிப்  மீண்டும்  பிரதமராகி  பிஎன்னை  வழி நடத்தலாம்”. மகாதிர் அவரது  வலைப்பக்கத்தில்  இவ்வாறு  பதிவிட்டுள்ளார்.

அவர்  பதவியில் உள்ளவரை  1எம்டிபி  பற்றிய  உண்மை  வெளிவராது.

“பிரதமர்  அங்கிருக்கும்வரை  முறையான  விசாரணை  நடத்த  முடியாது.

“இப்போதே  பார்க்கிறோம், 1எம்டிபி  மீதும்  ஜோ  லோ  மீதும்  செய்யப்பட்ட  போலீஸ்  புகார்கள்  விசாரிக்கப்படவில்லை  என்பதுடன்  யார்  அப்புகாரைச்  செய்தாரோ  அவர்    நொடித்துப்  பொனவராக  அறிவிக்கப்பட்டு  அவரது  வீடு பறிமுதல்  செய்யப்பட்டு  விற்கப்பட்டிருக்கிறது. அவரே  பணச் சலவை  நடவடிக்கையில்  ஈடுப்பட்டதாகவும்  பயங்கரவாதத்துக்கு  நிதியுதவி  செய்ததாகக்  குற்றஞ்சாட்டப்பட்டு  விசாரணைக்கு  உள்ளாகியிருக்கிறார்”.

1எம்டிபி-க்கு  எதிராக  போலீஸ்  புகார்  செய்த  அவரது  விசுவாசியும்  பதவி  நீக்கப்பட்ட  பத்து  கவான்  அம்னோ  உதவித்  தலைவருமான  கைருடின்  அபு  ஹாசனுக்கு  ஏற்பட்ட  நிலையைத்தான்  மகாதிர்  குறிப்பிடுகிறார்.