இன்னுமொரு பாஸ் தலைவர் பினாங்கு அரசிலிருந்து விலகினார்

pas infoபாஸின்  முற்போக்குத்  தலைவர்களான  முகம்மட்  சாபு,  முஜாஹிட்  யூசுப்  ராவைத்  தொடர்ந்து  இன்னொரு  தலைவரும்  பினாங்கு  அரசில்  வகித்த  வந்த  பதவியைத்  துறந்துள்ளார்.

பினாங்கு  பாஸ்  தகவல்  தலைவர் ரொஸிடி  ஹுசேன்,  பினாங்கு  இளைஞர்  மேம்பாட்டு  கார்ப்பரேசன்  இயக்குனர்  பதவியிலிருந்து  வெளியேறினார்.

பினாங்கு  முதல்வர்  லிம்  குவான்  எங்  இன்று  ஓர்  அறிக்கையில்  இதைத்  தெரிவித்தார்.

அவர்களை  உண்மையான  கொள்கைவாதிகள்  என்றவர்  பாராட்டினார்.