பாஸ் டிஏபியுடன் உறவுகளை முறித்துக்கொண்டதா? குழப்பம்தான் நீடிக்கிறது

hattaபக்கத்தான்  ரக்யாட்  பங்காளிக் கட்சியான  டிஏபியுடன்  உறவுகளை  முறித்துக்கொள்ளும்  விவகாரத்தில்  பாஸ்  தலைவர்கள்  பேசும்  பேச்சு  குழப்பத்தைத்தான்  தருகிறது.

அண்மையில்  நடந்து  முடிந்த  பாஸ்  முக்தாமாரில் பேசியவர்களில்  சிலர்  பாஸ் இன்னும்  பக்கத்தானில்தான்  இருக்கிறது  என்றும்  வேறு  சிலர்  அது  டிஏபியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ள  வேண்டும்  என்றும்  கூறியதாக  முன்னாள்  பாஸ்  மத்திய  செயல் குழு  உறுப்பினர்  டாக்டர்  ஹட்டா  ரம்லி  தெரிவித்தார்.

எனவே, இவ்விவகாரத்தில்  ஒரு  தெளிவான பதிலைக்  கொடுக்க  வேண்டியது  பாஸின்  புதிய  தலைமையின்  பொறுப்பாகும்.

“புதிய  தலைமை  முறையான பதிலை  முன்வைக்க  வேண்டும்”, என்று  ஹட்டா  இன்று  டிஏபி  தலைமையகத்தில்  பேசியபோது  குறிப்பிட்டார்.