எம்டிபி விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப பிஏசி இணக்கம்

jazlan1எம்டிபி விசாரனையைத்  தொலைக்காட்சியில்  நேரடியாக  ஒளிபரப்புவத்தில்  பொதுக்  கணக்குக்  குழு(பிஏசி)வுக்கு  எந்தப்  பிரச்னையுமில்லை.

“அதில் எனக்குப்  பிரச்னையே இல்லை”, என  பிஏசி  தலைவர்  நூர் ஜஸ்லான்  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

“ஆனால், நடப்பு  நாடாளுமன்ற  நடைமுறையில்  அதற்கு  இடமில்லை.அதனால்  கேள்வி  என்னவென்றால்  நேரடி  ஒளிபரப்புக்கு  அனுமதி அளிக்கும்  அதிகாரம்  யாரிடம்  உள்ளது, அமைச்சரவையிடமா,  அவைத்  தலைவரிடமா?”, என  நூர்  ஜஸ்லான்  வினவினார்.

கடந்த  வாரம்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  “ஒளிப்பதற்கு  ஒன்றுமில்லை”  கலந்துரையாடலில்  கலந்துகொள்ளாததால்  1எம்டிபி  மீதான  பிஏசி  விசாரணையையாவது  நேரடியாக  ஒளிபரப்ப  வேண்டும்  என்று  உலகளாவிய  மிதவாதிகள்  இயக்கம்  கேட்டுக்கொண்டிருக்கிறது.