ஜெலுபு பாஸ் தலைவர்கள் ஐவர் பதவி துறப்பதாகவும் கட்சியிலிருந்து வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளனர்.
இஸ்லாமியக் கட்சியின் அண்மைய நடப்புகளால், குறிப்பாக கட்சித் தேர்தலில் உலாமா அணியிடம் முற்போக்காளர் அணி கிட்டதட்ட முற்றாக தோல்வி அடைந்ததன் விளைவாக, அவர்கள் இம்முடிவுக்கு வந்துள்ளனர்.
“புதிய பாஸ் தலைமையிடம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை”, என அவர்கள் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
ஜெலுபு இளைஞர் தலைவர் முகம்மட் பைசல் பாட்லி இட்ருஸ், ஜெலுபு தேர்தல் இயக்குனர் சைபுல் பஹ்ரி, ஜமான்,, லாடாங் ஜெலுபு கிளை செயலாளர் மலான் முகம்மட் யூசுப், கேய்லாங் கிளை தலவல் தலைவர் ரனிமான் ஏ.ரனி, பண்டார் கிளாவாங் கிளை பொருளாளர் ஒமார் ஒத்மான் ஆகியோரே அந்த ஐவருமாவர்.
மானமுள்ளவர்களும் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்களும் இவ்வாறுதான் செய்வார்கள்.
உங்கள் முடிவும் தைரியம் பாராட்டத்தக்கது. சமயத்துக்கும் அரசியலுக்கும் வேறுபாடு தெரிந்தும், தெரியாததுபோல் சிறுபிள்ளைத்தனமாய் கோமாளித்தனம் செய்யும் புதிய பாஸ் தலைமையின் கீழ் தொடர்ந்திருப்பதைவிட வெளிநடை செய்வதே சிறப்பு. மக்களின் நம்பிக்கையை விலைபேசிய இந்த புதிய பாஸ் தலைமைத்துவத்துக்கு நல்ல பாடம் புகுத்தப்பட வேண்டும்!!!! மக்கள் துரோகிகள் என்று சொன்னாலும் தவறாகாது!!!
பாஸ் மா எனும் மிதவாத சமய அமைப்புடன் இணைந்து அதன் தலைவர் காலித் சாமத் அவர்களுடன் சேர்ந்து வலுவான அமைப்பாக உருவாக்கி தேர்தலில் போட்டியிடலாம்..!
முற்போக்காளர் அணி புதிய கட்சி தொடங்கி மக்கள் கூட்டனியில் சேரலாமே . மக்கள் உங்கள் வரவேற்பர்.உறுதியான கூட்டனி உருவாக்கலாம்.தற்போதைய பாஸ் தலைமைத்துவம் அம்னோ வலையில் விழுந்து விட்டது.இனி எந்த நிலையிலும் மக்கள் ஆதரவு கிடைக்காது.