பாஸ்- டிஏபி பிரச்னைகளின் காரணமாக சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுவதை மந்திரி புசார் அஸ்மின் அலி மறுத்தார். அவற்றின் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக அவர் சொன்னார்.
பிகேஆர் துணைத் தலைவருமான மந்திரி புசாரிடம், பக்கத்தான் ரக்யாட்டை ஆட்டிப்படைக்கும் நெருக்கடிக்குத் தீர்வுகாண அவர் எப்போது டிஏபி-யையும் பாஸையும் சந்திப்பார் என்று வினவியதற்கு. “கடந்த சில நாள்களாக சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்”, என்றார்.
“பக்கத்தான் எதிர்காலம் உள்பட எல்லாவற்றைப் பற்றியும் பேசினோம்”, என்று ஷா ஆலமில் செய்தியாளர்களிடம் அஸ்மின் தெரிவித்தார்.
சந்திப்புகளால் பலன் உண்டா என்று வினவியதற்கு, “சந்திப்புகள் தொடர்கின்றன”, என்றவர் சொன்னார்.
உடைந்த கண்ணாடியை ஓட்ட வைப்பது என்பது வீண் வேலை. பாஸ் கட்சியை மறந்து விட்டு மக்கள் நீதிக் கட்சி மலாய்க்காரர்களிடையே தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டால் சிலாங்கூர் மிஞ்சும். அது மட்டும் அல்ல மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு தலைமை வகிக்கும் மக்கள் நீதிக் கட்சி குறைந்த பட்சம் வெற்றிப் பெறக் கூடிய 25 இடங்களிலாவது போட்டியிட இப்பொழுது இருந்தே தயாராக வேண்டும். எல்லாம் அஸ்மின் கையில் உள்ளது. அதே வேளையில் PSM கட்சியை சிலாங்கூர் இந்திய மக்களிடையே செல்வாக்குப் பெற வைத்து இந்தியர்கள் மிகுந்த ஒரு சில சட்டமன்ற தொகுதிகளைக் கொடுத்து அரவணைத்துக் கொள்ளலாம். இல்லையேல் அடுத்த தேர்தலில் அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து சிலாங்கூரில் ஆட்சி அமைக்கக் கூடும். அரசியல் அறிவாளிகள் அரியணையில் அமரலாம். ஐயா PSM கட்சிக்காரர்களே கொஞ்சம் அறிவாளித்தனமாக இப்பவே மக்கள் நீதிக் கட்சியிடமும் ஜ.செ.க. – யிடமும் சேர்ந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பழகிக் கொள்ளுங்கள். உங்கள் சோஷலிச சித்தாந்தத்தை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு தொழிலார் மற்றும் ஏழைகளின் தொண்டனாக உங்களை உரு மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய சோசலிஷ சித்தாந்தத்தை ஒரு இனிப்பான மேல் உரையை போட்டுக் கொடுங்கள். அப்பத்தான் அதன் கசப்புத் தெரியாமால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதை விடுத்து கடந்த தேர்தலில் உங்கள் கொள்கை பரப்புரையாளர்கள் பேசிக் கொண்டிருந்த கமிநியூச சித்தாந்தை ஒதுக்கி வையுங்கள். இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு அதன் மீது ஒரு வகை அலர்ஜியை ஏற்படுத்தி வைத்துள்ளது தே.மு.