சொல்வதை முகத்துக்கு நேராக சொல்லுங்கள்: இணையப் பயனர்களுக்கு நஸ்ரி சவால்

Jpegதுணிச்சலாக  பேசும் குணமுள்ளவரான பண்பாட்டு, சுற்றுலா  அமைச்சர்  முகம்மட்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,  சமூக  வலைத்தளங்களில்  ஒளிந்துகொண்டு தம்மைக்  குறைகூறுவோரை  நேருக்கு  நேர்  வந்து  பேசுமாறு  அறைகூவல்  விடுத்துள்ளார்.

“டிவிட்டரோ  முகநூல்  பக்ககோ  இல்லாத  ஒரே அமைச்சர்  நானாகத்தான்  இருப்பேன்.

“முகநூலில்  எனக்கு  நம்பிக்கை. நேருக்கு நேர்  பேசுவதில்தான்  நம்பிக்கை. என்னைச்  சாட  வேண்டுமா, நேருக்கு  நேர் வந்து  சாடுங்கள். நானும்  நேரடியாகவே  பதிலளிக்க  வசதியாக  இருக்கும்”, என்றார்  நஸ்ரி.

ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில்  அரசியலில்  தலையிட்டால்  அரசாங்கம் “பதிலடி” கொடுக்கும்  என்று  தாம்  கூறியதைச்  சமூக  வலைத்தளங்களில்  சாடியிருப்பவர்களுக்குப்  பதில் அளிக்கும்  வகையில்  நஸ்ரி  இவ்வாறு  கூறினார்.