ரிங்கிட் கடந்த ஒன்பதாண்டுகளில் மிக மோசமான அளவுக்கு மதிப்புக் குறைந்திருப்பதற்கு டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குறைகூறி வருவதுதான் காரணமாம்.
இவ்வாறு நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் தெரிவித்ததாக உத்துசான் மலேசியாவின் வார இறுதிப் பதிப்பான மிங்குவான் மலேசியா அறிவித்துள்ளது. இவ்வாரம் டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.73ஆகக் குறைந்தது.
“டாக்டர் மகாதிர் முன்வைக்கும் விவகாரங்களும் அவற்றுக்குச் சில தரப்பினரின் ஆதரவும் ரிங்கிட்டின் மதிப்புக் குறைவுக்குக் காரணமாகும்”.
நேற்று பொந்தியானில் கிராமத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய அஹ்மட், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைகூறுவதை நிறுத்தும்படி மகாதிரைக் கேட்டுக்கொண்டார்..
காக்கை உட்கார பனங்காய் கீழே விழுந்த கதை.
சபாவில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்க்கு துன் மஹாதீர் தான் காரணம் என்று சொனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை
இந்த வெங்காயத்திற்கு பொருளாதாரத்தைப்பற்றி என்ன தெரியும்?
பேருக்குதான் பெரிய பதவி ஆனால் ஒன்றும் கிழிக்க முடியாது. ஒன்றுமில்லா சிங்கப்பூர் இன்று இந்த அளவிற்கு முன்னேறி இருப்பதற்கு என்ன காரணம்? இதிலிருந்தே தெரிய வேண்டுமே இந்த ஈன ஜென்மங்களின் திறமையைப்பற்றி — இங்கு என்ன நடந்தாலும் எவனுக்கும் அக்கறை கிடையாது எல்லாம் இவன்களின் கையில் இருக்கும் வரை.
இவனெல்லாம் ஒரு மந்திரியா ?????
அடக்கடவுள்ளே!!!!
இவன் பேச்சை கேட்க்கும் மூடர்களும் உள்ளவரை இவன் மந்திரியே…..
இதுதான் “jaguh kg ” ….
இவ்வளவு மோசமான நாணய மதிப்பு நஜிப் ஆட்சியில் நடந்துள்ள்ளது உலகமே அறியும். இன்னும் மகா காக திரை பேசி நேரத்தை வீணாக்குவது வெந்த புண்ணில் நெருப்பை உற்றுவது சமம். நிதி மதிப்பை உயர்த்த வழியை காணுங்கள். இல்லையேல் பதவி விலகி பொது தேர்தல் நடத்துங்கள். உன்னை போல் மாங்க மடையர்கள் இருக்கும் வரை சிங்கப்பூர் மென்மேலும் உயரும்.
ஆட தெரியாதவன் மேடை கோணல இருக்குதுன்னு சொன்ன கதையா இருக்கு.ஒரு மந்திரி அதிலும் ஒரு துணை நிதி அமைச்சர் சொல்லும் பொழுது மக்கள் யோசிக்க வேண்டும் இவரின் தரத்தை பற்றி…கடவுளே எங்களுக்கு துணை
ஒரு அம்னோ அமைச்சர் “மகாதீர்” ஒரு சாதாரண குடிமகன், பிரதமருடன் விவாதம் செய்வதற்கு அவருக்கு உரிமையில்லை என்கிறார். மற்றொரு அம்னோ அமைச்சர் ரிங்கிட்டின் சரிவுக்கு “மகாதிரே” காரணம் என்கிறார்.
ஒரு நாட்டின் நாணய மதிப்பை நிர்ணயக்கும் சக்தி, ஒரு சாதாரண குடிமகனிடம் கையில் என்பதை நினைக்கும்போது, பெருமையாக இருக்கிறது.
இது என்ன புதுக்கதை .
மாக்கள்