நஸ்ரி: ஹுடுட் சட்டவரைவுக்கு பேரரசர் அனுமதி தேவை

Nazricabinethududபேரரசரின்  அனுமதியின்றி பாஸ்  தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின்  ஹுடுட்  சட்டவரைவை மக்களவையில்  விவாதிக்க  முடியாது.

சமயம்  தொடர்பான  எந்தவொரு  சட்டவரைவையும்  நாடாளுமன்றத்தில்  கொண்டுவர  ஆட்சியாளர்கள்  மன்றத்தின் ஒப்புதல்  தேவை  எனப் பண்பாட்டு, சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார்.

“கூட்டரசு  நிலையில்  ஆகோங்-தான்  இஸ்லாத்தின்  தலைவர்.

“பேரரசருக்கு  அது  பற்றி  இன்னும்  விளக்கப்படவே  இல்லை  என்கிறபோது  ஹுடுட்  மீதான சட்டவரைவை  நாங்கள் எப்படி  விவாதிக்க  முடியும்? அது அவமதிக்கும்  செயலாகும்”, என  நஸ்ரி  மலேசியாகினியிடம்  சனிக்கிழமை  தெரிவித்தார்.

எனவே, ஹாடி  முதலில்  பேரரசரைச்  சந்திக்க அனுமதி  பெற்று  சட்டவரைவு பற்றி  அவருக்கு விளக்க  வேண்டும், அதுவே  சரியான  நடைமுறையாகும்  என்றாரவர்.