ஜிஎஸ்டியால் மக்கள் கூடுதலாகச் செலவிடுவதை நிதி அமைச்சு ஒப்பியது

mofரிம2,000-த்துக்குக்  குறைவான  மாத  வருமானத்தைக்  கொண்டவர்கள் வருமானத்தில் ரிம51.89 அல்லது 2.59 விழுக்காட்டைப்  பொருள்,  சேவை வரிக்காகச்  செலவிடுவதை  நிதி  அமைச்சின்  ஆய்வு  ஒன்று  காண்பிக்கிறது.

இது, விற்பனை, சேவை  வரி(எஸ்எஸ்டி)  இருந்த  காலத்தில்  அவர்கள் செலவிட்டதைவிடவும்  அதிகமாகும். அப்போது  அவர்கள் வருமானத்தில்  ரிம36.83 அல்லது  1.84 விழுக்காட்டை  எஸ்எஸ்டிக்குச்  செலவிட்டார்கள்.

அதே  வேளை  ரிம8,000 மாத  வருமானம்  பெறுவோர்  ரிம290  அல்லது 4.14 விழுக்காட்டை   ஜிஎஸ்டிக்குச்  செலவிடுகிறார்கள். இவர்கள் எஸ்எஸ்டிக்காக   செலவிட்டது ரிம169  அல்லது  2.8 விழுக்காடு.

இவை  கடந்த  வியாழக்கிழமை  நாடாளுமன்றத்தில்  தெரிவிக்கப்பட்ட  புள்ளிவிவரங்கள்.

இப்புள்ளிவிவரங்களை  வெளியிட்ட  நிதி  அமைச்சு, “  ஆய்வின்படி  பார்த்தால்  குறைந்த வருமானம்  பெறுவோர் கூடுதல்  வருமானம்  பெறுவோரைவிட  ஜிஎஸ்டிக்குச்  செலவிடுகிறார்கள்  என்ற  தோற்றப்பாடு  தவறாகும்”, எனக்  கூறிற்று.

“கூடுதல் வருமானம்  பெறுவோர்  கூடுதலாக  செலவிடுவதால்  அவர்கள்  ஜிஎஸ்டிக்குச்  செலவிடும்  தொகை  அதிகமாகும்”, என. நிதி  அமைச்சு  ஒஸ்கார்  லிங்(டிஏபி- சிபு)குக்கு  அளித்த  பதிலில்  தெரிவித்தது.