சரவாக் ஆளுனர் அப்துல் ரஹ்மான் தயிப் மஹ்மூட்டின் மகன் மஹ்முட் அபு பெகிர், தம் முன்னாள் மனைவி ஷானாஸ் ஏ.மஜித்தின் கணக்காய்வாளர் கூறுவதுபோல் தம் சொத்தின் மதிப்பு ரிம1.185 பில்லியன்தான் என்பதை ஒப்புக்கொண்டார்.
இன்று ஷானாஸின் வழக்குரைஞர் ரஃபி ஷாபி அவரது சொத்தின் மொத்த மதிப்பு என்னவென்று வினவியதற்கு சற்று நிதானித்து கணக்காய்வாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை சரியானதுதான் என்றார்.
“ஆனால், அதில் கடன் பொறுப்புகள் சேர்க்கப்படாதிருக்கலாம்”, என்றாரவர்..
தனக்கு 50 நிறுவனங்கள் சொந்தமாக இருப்பதாக பெகிர் தெரிவித்தார். அவற்றில் இரண்டு மட்டும் பங்குச் சந்தையில் பதிவு பெற்றவை. மற்றவை அவருடைய சொந்த நிறுவனங்களாகும்.
1.185 பில்லியன் வெறும் சில்லரைதான்– இவனும் இவன் அப்பனும் சரவாக்கை கொள்ளை அடித்து சிங்கபூரிலும் வெளி நாடு களிலும் இன்னும் எவ்வளவு சேர்த்து வைத்திருகிரான்களோ?
எவன் அப்பா விட்டு சொத்து ?பரம்பரை பணக்காரன் இவன்??
அவருக்கு 50 நிறுவனங்கள் சொந்தமாக இருக்கின்றன. அப்படி என்றால் பில்லியன் எல்லாம் பெரிய தொகை அல்லவே!
நான் கூட 100 நிறுவனங்களை நிறுவலாம் பேருக்காக. ஆனால் அது வெற்றி அடைந்து பணம் பண்ணுமா? அதற்க்கு அரசியல் பலமும் பணபலமும் தேவை. அது எங்கு இருந்து வந்தது? பணக்கார சீனர்களிடமிருந்து. அத்துடன் ஊழல் வழியும். இன்னும் எவ்வளவோ.
பாவம் சரவாக் மக்கள்.!!!!! அரசியல் வாழ்க்கையில் அப்பன் சொத்தை மகன் அனுபவிக்கிறான்!!! சரவாக் மக்கள் விழிக்கும்வரை இது ஒரு தொடர்கதையே!!!
பாவம் சரவாக் மக்கள் ஏமாளிகள்.கோமாளிகளாக ஆக்கப்பட்டனர்.