புத்ரா ஜெயா, துணிச்சலாகக் கருத்துத் தெரிவிக்கும் அரச குடும்பத்தாரைக் கவனித்துக் கொண்டிராமல் 1எம்டிபி மீதும் மற்ற தேசிய விவகாரங்கள்மீதும் கவனம் செலுத்துவது நல்லது என ஜொகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் வலியுறுத்தினார்.
“என்னைப் பயன்படுத்தி 1எம்டிபி-இலிருந்தும் மற்ற தேசிய விவகாரங்களிலிருந்தும் கவனத்தைத் திசைதிருப்ப முயலாதீர்.
“நாட்டுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றும் தூய்மையான, வெளிப்படையான அரசியல்வாதிகளே தேவை”, என துங்கு இப்ராகிம் ஜோகூர் கால்பந்துக் குழுவின் முகநூல் பக்கத்தில் கூறினார்.
துங்கு இப்ராகிம் ஜோகூர் கால்பந்துக் குழுவின் தலைவராவார்.
பட்டத்து இளவரசருக்கே அவல / மதிப்புக் குறைவான பதில் என்றால், சாதாரண மக்களின் கேள்விக்கா பி என் அமைச்சர்கள் பதில் சொல்வார்களா??? தூக்கிவிட்ட மக்களையே எட்டி உதைக்கும் அமைச்சர்களா நீங்கள்??? பாவம்! பி என்னுக்கு வாக்களித்த 47% ஏமாளி மக்கள்!!!!
ஜோஹோர் பட்டதிளவரசரே!! மக்களின்பால் அக்கறை கொண்டு குரல் எழுப்பும் தங்களின் மாண்பு தொடரட்டும். வாழ்க பல்லாண்டு!!!!
நீங்கள் மனதில் பட்டதை பளிச் என்று சொல்லிடீர் அமுல்ப்படுதபட வேண்டியவர்களுக்கு யார் உணர்த்துவது ? பூனைக்கு யார் மணி கட்டுவது ?
நீங்கள் தான்
உண்மையனே தலைவர் டுஅன்கு. வாழ்க……….
நாட்டின் நிலைத்தன்மைக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயல் படுவது நல்லது.
இளவரசர் போன்று நாங்கள் பேசினால் , அடுத்த நிமிடம் மாமியார் வீடு போக வேண்டி வரும் !
அரண்மனைக்கு அழகு பண்பாடும் கலாச்சாரமும்தான்.அரசியல் அல்ல.
வாழ்க பட்டது இளவரசர்
ஐயாவோட வ…வாளம் தெரியாமல் ஆஹா ஓஹோஹோ என்று புகழ வேண்டாம். சோழியன் குடுமி சும்மா ஆடாது. தன் குடும்ப மகுடிக்கு ஆடாத நடுவண் அரசைக் குறை சொல்ல வந்தவரின் பின் புலனையும் பார்த்து கருத்து எழுதுங்க.
சரியாக சொன்னீர்கள் மு.ப.கரிகாலன் . எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என்பது பல பேருக்கு புரிவதில்லை..
மாண்புமிகு படத்திளவர்சர்.கூறுகிற
தூயிமையான.வெளிப்படையான்.
அரசியல்வாதிகளை BN ஆளும்
கட்சியில் ஒரூ விரலைக்கூட
நீட்டியோ.மடக்கியோ குறிப்பிட முடியாத அளவுக்கு நாட்டு நடப்பு
கீழ்த்தரமாக போயிகிட்டு இருக்கு
உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்க
தக்கதும்.பாராட்டப்பட வேண்டும்.
நஜிப் ஆப்பு வய்க வட்டுடன் ஒருதன் !
எல்லாம் சுயநலமா?
சுயநலமே!.
பட்டத்திளவரசர் பட்டினத்தார் அல்ல என்பது உண்மை தான்! ஆனால் சொல்ல வந்த கருத்து மக்களுக்கு எதிரானது அல்லவே! நாமும் வரவேற்போம்!
உன்னைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமானால், நீர் உன் நண்பனைக் காட்டு என்று ஒருவரை அறிந்துக் கொள்ள முயற்சிப்போம். ஒருவரின் பின்னணியைப் பார்த்து அவர் சொல்லும் கருத்து மக்களின் மீது திடீரென்று வந்த பாசாத்தினாலா அல்லது நிரந்திரமாக உள்ள பாசத்தினாலா என்று தெரிந்து விடும். கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு மலாய்க்காரர் சுவிஸ் நாட்டிற்கு புகலிடம் கேட்டு ஓடிப் போனாரே அது ஏன் என்று அறிந்துக் கொண்டு திடீர்பாசம் எப்படிப் பட்டது என்றும் எப்படி வந்தது என்றும் தெரிந்துக் கொள்வோம். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஒன்றா இரண்டா இவரைப் பற்றி எடுத்துச் சொல்ல?.
மக்கள் நலனுக்கான கருத்து யாரிடமிருந்து வந்தாலென்ன?? நல்லதென்றால் ஆதரிப்பதே சிறப்பு. நடவடிக்கையின் பின்னணியை அலசுவானேன்???
இப்படி விவேகமாக சொந்த கருத்தை வெளியிடும் மனப்பாங்கு எல்லா அரச குடும்பத்தினருக்கும் இருக்க வேண்டும்…..
அரச குடும்பங்களிலேயே ஜோஹூர் தான் பணக்கார குடும்பம். அத்துடன் கொஞ்சம் வெள்ளைக்கார ரத்தமும் ஓடுகிறது. ஆனாலும் சமீபத்தில் கட்டிமுடித்த EDL -விரைவு சாலையின் நிலையை போய் பாருங்கள் –குண்டும் குழியுமாய். இதற்க்கு ஒதுக்கிய பணத்தில் யார் யார் கை வைத்தார்களோ? இந்த EDL -அரச நில வழியாக கட்டப்பட்டு இருக்கின்றது .தற்போது பல இடங்களில் கடல் கரை நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன -இதில் யார் யார் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர்?
கடந்த காலங்களில் நாட்டில் பல அநியாயங்கள் நடந்த சமயம் இந்த அரண்மனை வாசிகள் வாயை திறக்கவில்லை . அனால் இப்பொழுது தான் ; வாய் இருப்பது நினைவுக்கு வந்ததா ? பந்தியில் பக்கத்து இலைக்கு பாயாசம் ஊதுங்க என்று குரல் கொடுப்பவரின் நோக்கம் தனக்கும் பாயாசம் வேண்டும் என்பதுதான்.