டிஏபி எம்பிகள் பலர், தேசிய குடிமையியல் பிரிவையும் (பிடிஎன்) சிறப்பு விவகாரப் பிரிவையும்(ஜாசா) ஒழித்துக்கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அரசியல் நோக்கத்திற்காகவே அவை உருவாக்கப்பட்டன என்பது தெளிவு, ஜாசாவுக்கு ஆண்டுக்கு ரிம21.7 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவ்விரண்டு பரப்புரை பிரிவுகளுக்காகவும் ஆண்டுக்கு ரிம80 மில்லியன் செலவிடப்படுகிறது.
“இனவாதம் மிக்க மலிவான பரப்புரைகள் செய்வதற்காகவும் பிஎன்னைக் குறைகூறுவோருக்கு எதிராக அவதூறு கூறவுமே இவ்வளவு செலவிடப்படுகிறது.
“அதனால்தான் இவ்விரு பிரிவுகளையும் அகற்ற வேண்டும் என ஒருமித்த குரலில் கேட்டுக்கொள்கிறோம்”, என புக்கிட் பெண்டேரா எம்பி ஜைரில் கிர் ஜோகாரி கூறினார்.

























இவ்விரண்டையும் ஒழிப்பது அரசாங்கத்தை அழிப்பதற்குச் சமம். பி என் இருக்கும் வரையில் இம்மாதிரியான பிரிவுகள் அதிகரிக்குமே தவிர அழிக்கப்படாது!!! நம்பிக்கை இல்லையென்றால் உத்தூசானிடமோ டிவி3யிடமோ கேளுங்கள்!!