‘பக்கத்தான் சாகவில்லை, உயிருடன்தான் இருக்கிறது’

pakatanஎதிரணித்  தலைவர்களில் பலர்  பக்கத்தான்  ரக்யாட்  ஓர்  அரசியல்  சக்தியாக  தொடர்ந்து  நிலைபெற்றிருப்பதைக்  காணவே  விரும்புகின்றனர்.

பக்கத்தான்  கதை  முடிந்ததாக  லிம்  குவான்  எங்  அறிவித்த  சில  நிமிடங்களிலேயே  பாஸ், பிகேஆர்  தலைவர்கள் பக்கத்தான்  என்று  சொல்லவே  பெருமையாக  இருக்கிறது  என்றும்  தாங்கள்  இன்னமும்  அக்கூட்டணியில்தான்  இருப்பதாகவும்  கூறிக்கொண்டனர்.

பாஸ்  இளைஞர்  தலைவர்  நிக்  அப்டு  நிக்  அசீஸ், பக்கத்தான்  ரக்யாட்  கூட்டணி  இன்னமும்  இருக்கிறது  என்றார். அதன்  கதை  முடிந்தது  என்று  கூறியது  டிஏபி-இன்  சொந்த  முடிவு.

பாஸ்  முக்தாமாரில்  கொண்டுவரப்பட்ட  டிஏபி-யுடன் உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளக்  கோரும்  தீர்மானத்தை  பாஸ்  ஷுரா  மன்றம்  இன்னும்  விவாதிக்கவில்லை  என்றவர்  சொன்னார்.

“(பக்கத்தான்)  கதை  முடியவில்லை. இப்போது  இரண்டு  கட்சிகள்  இருக்கின்றன. கட்சிகளின்  கூட்டணிதான்  பக்காத்தான். இரண்டு  கட்சிகள்  அதில்  இருந்தால்கூட  அது  கூட்டணிதான், இனி, எல்லாம்  பாஸ்ஸையும்  பிகேஆரையும்  பொறுத்தது”, என இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  நிக் அப்டு  கூறினார்.

இதனிடையே, ஷா  ஆலம்  எம்பி  காலிட்  சமட், டிஏபி  முடிவு  பாஸுக்கும்  மற்ற  பக்கத்தான்  தலைவர்களுக்கும்  ஒரு  பாடமாகும்  என்றார். அவர்கள் தங்களின்  நண்பர்களைப்  பற்றிப்  பேசும்போது  எச்சரிக்கையாக  இருக்க  வேண்டும்.

“அந்தத்  தீர்மானத்தின் விளைவாகத்தான்  டிஏபி  அப்படிக்  கூறியுள்ளது. இது  அனைவருக்கும்  ஒரு  பாடமாக  அமைய  வேண்டும்.  பேச்சிலும்  செயலிலும் எச்சரிக்கையாக  இருக்க  வேண்டும். பக்கத்தான் குறுகிய காலத்தில்  உருவாகி  வலிமைபெற்ற  ஒன்றல்ல.

“அது  பற்பல ஆண்டுகள் ஒன்றாகப்  போராடியதன்  பயன். ஆனால், சொல்லிலும்  செயலிலும்  கட்டுப்பாடு  இல்லையென்றால்  இதுதான்  நேரும்”, என  காலிட் கூறினார்.