பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இளவல், நாசிர் அப்துல் ரசாக் எல்லா இனங்களையும் உள்ளடக்கி ஒரு புதிய கட்சியைத் தொடங்க விருப்பதாக ஏசியா செண்டினல் அறிவித்துள்ளது.
அப்புதிய கட்சி, நாட்டைப் பிளவுபடுத்தும் இன அரசியலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தைக் கொண்டது என அச் செய்தி கூறியது.
கட்சியை வழிநடத்த சைபுடின் அப்துல்லாவை நாசிர் அணுகியிருப்பதாக தெரிகிறது. சைபுடின், முன்னாள் கல்வி துணை அமைச்சரும் அம்னோவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள தாராளப் போக்காளர்களில் ஒருவருமாவார்.
மலேசியாகினி சைபுடினுடன் தொடர்புகொண்டு பேசியபோது அவர் இவ்விவகாரம் குறித்துக் கருத்துரைக்க மறுத்தார்.

























இன்னொரு அரசியல் கட்சியா ?? தேவையற்றது என்றே கருதுகிறேன். ஆளும்கட்சியின் அநியாயங்கள், அட்டகாசங்களை எதிர்க்க எதிர்க்கட்சியான பக்காத்தானுடன் கரம் கோர்க்கலாமே ??? நோக்கம் ஒன்றுதானே???
தலைமைப் பதவி கிடைக்கும் பிரதமர் பதவி கிடைக்காது!
இரண்டாவது அணி என்றால் பகட்டான் ரக்யத் தான்…
நல்லது நடந்தால் மலேசியர்களுக்கு நன்மை.