அமைச்சரும் இளவரசரும் சர்ச்சையை நிறுத்த வேண்டும்

bickeringஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிமும்  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீசும்  சர்ச்சையிடுவதை  நிறுத்த  வேண்டும்  என  அம்னோ  உச்சமன்ற உறுப்பினர்  ஒருவர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

“இருவரும் இதற்கு  ஒரு  முடிவுகட்டும்  தருணம்  வந்து விட்டது”, என  ரிஸால்  மரைக்கான்  நைனா  மரைக்கான்  கூறினார்.

“ஒருவரை  மற்றவர்  மதிக்க  வேண்டும். மக்கள் ஒரு  அசிங்கமான  காட்சியைக்  காண  விரும்பவில்லை.

“எனவே, அமைச்சர்  மட்டுமின்றி இளவரசரும் (அதற்கு முடிவுகட்ட) முன்வர  வேண்டும்”, என்றவர்  கூறினார்.