இரகசியங்களை வெளியிடாதீர்: அரசு அதிகாரிகளுக்குப் பிரதமர் அறிவுறுத்து

najஅரசாங்க  இரகசியங்களை  வெளியிடக் கூடாது  எனப்  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்  அரசாங்க  அதிகாரிகளைக்  கேட்டுக்கொண்டார்.

இன்று  புத்ரா  ஜெயா  மாநாட்டு  மையத்தில்  உரையாற்றிய  பிரதமர், அண்மையில்  சில  இரகசியங்கள் “கசிந்திருப்பதாக”க்  கூறினார்.

“கடந்த  சில  நாள்களாக  பல  இரகசியங்கள்  வெளியாகியுள்ளன. அதனால்  அரசாங்க  இரகசியங்களைத்  தயவு  செய்து  பாதுகாப்பீர்.

“அரசாங்கத்  துறை  ஒரு  முடிவை  அறிவிப்பதற்குத்  தயாராக  இல்லாதபோது  நீங்கள்  முந்திக்கொண்டு  வெளிப்படுத்தி விடாதீர்கள். ஏனென்றால் முடிவு  பின்னர்  வேறு  மாதிரியாக  இருக்கலாம்”, என்றாரவர்.

“டோல்  கட்டண  விவகாரத்தில்  நடந்ததைப்  பாருங்கள்.  எதுவும்  இறுதி செய்யப்படுமுன்னர்  அது  வெளியில்  கசிந்து  விட்டது”.

நாட்டின்  நலனை  முன்னிட்டு அரசு  அதிகாரிகள் இரகசியங்களைக்  காக்க வேண்டும்  என  நஜிப்  கேட்டுக்கொண்டார்.