எம்டி ஒர்கிம் ஹார்மனி-இன் 22 பணியாளர்களும் விடுவிக்கப்பட்டனர்

mt harmoniஎண்ணெய்த் தாங்கிக்  கப்பலான எம்டி ஒர்கிம் ஹார்மனி-இன்  22  பணியாளர்களும்  இன்று  அதிகாலை  மணி 2.30க்கு  விடுவிக்கப்பட்டனர்.

மலேசிய கடற்படை  கடத்தல்காரர்களுடன்  பேச்சு  நடத்தியதை  அடுத்து  பணியாளர்கள்  அனைவரும் விடுவிக்கப்பட்டதாக  மலேசிய  கடலோர  அமலாக்க  நிறுவனத்  துணைத்  தலைவர்  அஹ்மட்  பூசி  கூறினார்.

இதனிடையே, கடத்தல்காரர்கள்  கப்பலில்  இருந்த  படகு  ஒன்றில்  தப்பி  ஓடிவிட்டதாக  கடற்படைத்  தலைவர்  அப்துல்  அசீஸ்  ஜாபார்  தெரிவித்தார்.

எம்டி ஒர்கிம்  ஹார்மனி, கடந்த வியாழக்கிழமை  6,000  டன்  பெட்ரோலை  ஏற்றிக்கொண்டு  மலாக்காவிலிருந்து  குவாந்தானுக்குச் சென்று  கொண்டிருந்தபோது  கடத்தப்பட்டது.

-பெர்னமா