போலீஸ் அதிரடிப் படையின் முன்னாள் உறுப்பினர்களான சிருல் அஸ்ஹார் உமருக்கும் அஸிலா ஹட்ரிக்கும் தூக்குத் தண்டனை விதித்து ஆறு மாதங்கள் ஆகின்றன.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய சிருலை அங்கிருந்து அழைத்துவர மலேசிய அரசாங்கம் இதுவரை விண்ணப்பம் எதுவும் செய்து கொள்ளவில்லையாம். கொல்லப்பட்ட அல்டான்துன்யா ஷரிபூ-வின் தந்தையாரின் வழக்குரைஞர் ராம் கர்பால் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலும் இரண்டு தடவை கேட்டு விட்டதாக அந்த புக்கிட் குளுகோர் எம்பி கூறினார். ஆனால், அதற்கு அளிக்கப்பட்ட பதில் நம்பிக்கை தருவதாக இல்லை என்றார்.
“சிருலை நாடுகடந்து அழைத்துவர அனுமதி கேட்டு மலேசிய அரசாங்கம் இன்னும் மனுச் செய்யவில்லை என நினைக்கிறேன்”, என்றாரவர்.

























பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், ஒருகால் இந்த நடவடிக்கை நிறைவேறலாம். அதுவரையில் எல்லாம் கண்துடைப்பே!!!
மன்னிக்கவும். எதிர்க்கட்சி என்று பொருள் கொள்ளுங்கள்!!!