அசிஸ் பாரி: இளவரசர்களும் தேச நிந்தனைச் சட்டத்திற்கு உட்பட்டவர்களே

 

princes not exemptedஜொகூர் மாநிலம் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கோருபவர்களுக்கு தேச நிந்தனைச் சட்டம் 1948 லிருந்து விலக்கு ஏதும் அளிக்கப்படவில்லை என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி கூறினார்.

சாபாவும் சரவாக்கும் பிரிந்து செல்ல வேண்டும் என்று கூறியவர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கை இதனைக் காட்டுகிறது என்று அசிஸ் சுட்டிக் காட்டினார்.

இளவரசர் தேச நிந்தனைச் சட்டம் 1948 மற்றும் அது போன்ற இதர சட்டங்களை மீறினாரா என்பது குறித்து சட்டத்துறை தலைவரும் போலீசாரும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

அனைத்து குடிமக்கள் மீதும் சட்டத்தை சமமாக அமல்படுத்தும் கடமை இந்த இலாகாகளுக்கு உண்டு; ஜொகூர் இளவரசருக்கு இச்சட்டத்திலிருந்து விலக்கு இல்லை என்றாரவர்.

ஆட்சியாளர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் விதிகளுக்கு உட்பட்டு, ஒன்பது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே அந்த சலுகை உண்டு என்று அசிஸ் பாரி மலேசியாகினியிடம் கூறினார்.