சிலாங்கூர் அரசிலிருந்து டிஏபி விலகாது

puaடிஏபி சிலாங்கூர் அரசிலிருந்து விலகப்போவதாக  சின் சியு  நாளேட்டில்  வெளிவந்த  செய்தியை  சிலாங்கூர்  டிஏபி  தலைவர்  டோனி  புவா  மறுத்தார்.மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  ஆட்சிக்குழுவிலிருந்து  பாஸ்  உறுப்பினர்களை  வெளியேற்றவில்லை  என்றால்  டிஏபி மாநில  அரசைவிட்டு  விலகும்  என  அச்செய்தி  கூறிற்று.

அசெய்தியில்  “உண்மையில்லை”  என்றும்  அது  “குழப்பம்  தரும்”  செய்தி  என்றும்  புவா  கூறினார்.

மாநில டிஏபி  வியாழக்கிழமை  கூட்டம்  நடத்தி  சில முடிவுகளைச் செய்து வைத்துள்ளது  என்றாரவர்.

“சிலாங்கூர்  டிஏபி  மந்திரி  புசாரிடம்  விவாதிப்பதற்குச்  சில பரிந்துரைகளையும்  தீர்வுகளையும்  முன்வைத்துள்ளது.

“அவருடைய  பரிந்துரைகளைக்  கேட்பதற்கும்  தயாராக  இருக்கிறோம்”, என  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பியுமான  புவா  தெரிவித்தார்.

மாநிலச்  சட்டமன்றக்  கலைப்பைத் தவிர்ப்பதே  மாநில டிஏபி  நோக்கமாகும்  என்றாரவர். கடைசிப்பட்சமாகத்தான் அது அம்முடிவுக்கு  வரும்.

“இப்போது  பக்கத்தான்  அரசு  இல்லை  என்பதால்  சிலாங்கூரில்  புதிய  கூட்டணி  அரசாங்கம்  அமைவதை  வரவேற்கிறோம்.

“அக்கூட்டணி,  பொதுக்  கொள்கைக்  கட்டமைப்பையும்  மக்கள் எதை  நம்பி ஆளும்  அதிகாரத்தை  வழங்கினார்களோ  அந்த  தேர்தல்  கொள்கை  அறிக்கையையும்  அடிப்படையாகக்  கொண்டிருக்க  வேண்டும்”, என  புவா  கூறினார்.