மாணவர்களிடம் சிறுநீரை அருந்தச் சொன்னாராம் ஆசிரியர்

schகெடா, சுங்கைப் பட்டாணி தொடக்கநிலைப் பள்ளி ஒன்றின்  ஆசிரியர்,  முஸ்லிம்-அல்லாத மாணவர்களிடம் தண்ணீர் அருந்துவதாக  இருந்தால்  வகுப்பில்  அருந்தக் கூடாது என்றும், கழிப்பறைக்குச் சென்று அருந்தலாம்  என்றும் கூறியுள்ளார்.
மேலும், தண்ணீர் இல்லாவிட்டால்  அவர்கள் “குழாய் நீரையோ  சொந்த சிறுநீரையோ”  அருந்தலாம் என்றும்  சொன்னாராம். இவ்வளவுக்கும்  அவர்  மாணவர் நலன்களைக்  கவனித்துக்  கொள்ளும்  ஆசிரியராம்.

பல்வேறு  சமூக  வலைத்தளங்களிலும்  வலம்  வந்து  கொண்டிருக்கும் ஒரு  புகார்  கடிதம்  இதனைத்  தெரிவிக்கிறது.

அவரது நயமற்ற, நாகரிகமற்ற  பேச்சு முஸ்லில்-அல்லாத  மாணவர்களிடையேயும்  சமூகத்தினரிடையேயும் ஆத்திரத்தை உண்டுபண்ணலாம்  என்றது  கூறியது.

“ஆசிரியரான  அவரிடம்  முஸ்லிம்- அல்லாத  மாணவர்களுக்கும்  ஆசிரியர்களுக்கும்  அவர்களின்  உறவினர்களுக்கும்  மதிப்பளிக்கும்  பண்பு  இல்லை”, என்று  அக்கடிதம்  சாடியது.

நேற்று  பள்ளி  அணிவகுப்பின்போது  இச்சம்பவம்  நடந்துள்ளது.

இதன்  தொடர்பில்  மலேசியாகினி  அப்பள்ளியைத்  தொடர்பு  கொண்டதற்கு  அக்குற்றச்சாட்டு  பற்றி  அதிகாரிகளின்  கூட்டமொன்று  விவாதித்து  வருவதாக  அதனிடம்  தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே  கல்வி  துணை  அமைச்சர்  பி.கமலநாதன்  அதன்மீது  விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டிருப்பதாகக்  கூறினார்.

“கெடா  கல்வித்  துறையிடம் விசாரிக்குமாறு  பணிக்கப்பட்டிருக்கிறது. விசாரணை  முடிவுக்காகக்  காத்திருக்கிறோம்”, என்றார்.