பதவி இறங்கினால் வழக்கு தொடரப்படும் என்று அஞ்சியே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று டாக்டர் மகாதிர் முகம்மட் சுமத்தும் குற்றச்சாட்டை அம்னோ தலைவர் ஒருவர் வன்மையாக மறுக்கிறார்.
மாறாக, நஜிப், நாட்டின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக பதவியில் இருக்க நினைக்கும் “ஓர் ஆண்மகன்” என்று குறிப்பிட்டார் விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மான்.
“அவர் பதவி இறங்கினால்தான் கோழையாக, சவால்களை எதிர்நோக்கும் துணிச்சல் இல்லாதவராக, பொறுப்பற்ற பிரதமராகக் கருதப்படுவார்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
























