சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, இன்று சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்திருக்கிறார். அச்சந்திப்பில் பக்கத்தான் ரக்யாட்டுக்குப் பிந்திய சிலாங்கூர் மாநில அரசு பற்றிப் பேசப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை.
இன்று காலை ஷா ஆலம் இஸ்தானா காயாங்கானில் சிலாங்கூர் ஷியாரியா நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் நியமனம் செய்யும் சடங்கில் கலந்துகொண்ட பின்னர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா-வும் அஸ்மினும் தனிப்பட்ட முறையில் சந்தித்தனர். அச்சந்திப்பு இரண்டு மணி நேரம் நீடித்தது.
சந்திப்பு நடந்ததை அரண்மனை அதிகாரி ஒருவரும் மந்திரி புசாரின் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினர். ஆனால், சந்திப்பில் பேசப்பட்ட விவரங்களை வெளியிட அவர்கள் தயாராக இல்லை.

























அது வேற ஒன்றுமில்லை தண்ணி விசயம்தான். யார் யாருக்கு எது முக்கியமோ அதைத்தான் பேசுவார்கள். 1MDB – பற்றி நிச்சயமாக இவர்கள் பேசி இருப்பதற்கு வாய்ப்பில்லை. சட்ட மன்றத்தைப் பற்றியும் நிச்சயமாக அஸ்மின் பேசி இருக்கப் போவதில்லை காரணம் அவருக்கே தெரியும்.
செலங்கூரில் மறு தேர்தல் அறிகுறியோ ?
நெத்தியடி தேனீ அவர்களே!!!! அரசியல் என்பது சுயநலமும் கலந்ததுதானே!!!
கடைசியா செலங்கோர் மக்களுக்கு கிணறு தண்ணிதான் ….அவ்வ்வ்வ் ………
வயது ஆகிக்கொண்டே போகிறது, ……….. ஏதும் தேவை என்றால் சொல்லுங்க மன்னரே ?