‘1எம்டிபி பணம் காணாமல் போகவில்லை; WSJ செய்தியே சான்று’-நஸ்ரி

nazri3அமைச்சர்  ஒருவர்  1எம்டிபி  பணம் 13வது  பொதுத்  தேர்தல்  பரப்புரைக்குப்  பயன்படுத்திக்  கொள்ளப்பட்டதாகக்  கூறும்  வால்ஸ்ட்ரிட்  ஜர்னல்(WSJ) செய்தியை “நல்ல” செய்தியாகப்  பார்க்கிறார்.

அச்செய்தியின்படி பார்த்தால்,  அந்த  நிறுவனத்தின்  பணம்  காணாமல்  போகவில்லை; மக்களுக்குத்தான்  பயன்பட்டிருக்கிறது என்றாகிறது எனச்  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார்.

“அந்த  WSJ செய்தி உண்மை  என்றால்  நல்லதுதான். அது  பணம்  தொலைந்து   போகவில்லை  என்பதைக் காண்பிக்கிறது.  பிறகு  ஏன்  காணாமல்  போய்  விட்டதாகக்  கூறுகிறீர்கள்?

“நிதி அமைச்சுக்குச்  சொந்தமான  1எம்டிபி-இன் பணம்  மக்களுக்காகச்  செலவிடப்படுவதில்  என்ன  தப்பு?”. நஸ்ரி  மலேசியாகினியிடம்  பேசியபோது  இவ்வாறு  வினவினார்.

WSJ செய்தி  பணம்  காணாமல்போனதாகக் கூறும் பல குற்றச்சாட்டுகளையும்   பொய்யாக்குகிறது  என்றாரவர்.

“ஆக,  பணம்  கையாடப்படவில்லை. நாங்கள் பணத்தை  வீணாக்கவில்லை  என்பதை இது  காண்பிக்கிறது”, என்று  நஸ்ரி  கூறினார்.