குற்றவாளி எனத் தெரிந்தால் ஆசிரியர் முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
‘சிறுநீரைக் குடிக்குமாறு முஸ்லிம்-அல்லாத மாணவர்களிடம் கூறினார் ஆசிரியர்’

ரேட்: கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் அவர்களே, ஒரு தடவையாவது சொன்னபடி செய்வீர்களா? மேற்காணும் வார்த்தைகளை ஆசிரியர் சொல்லியது உண்மைதான் என்பது நிரூபணமானால் அவரது மன்னிப்பையோ முதலைக் கண்ணீரையோ பொருட்படுத்தாமல் 24 மணி நேரத்துக்குள் அவர், பணி ஓய்வு நன்மைகள் ஏதுமின்றி பதவிநீக்கம் செய்யப்படுவாரா?
பினாங்கிலிருந்து: ஒவ்வோர் ஆண்டும் நோன்பு காலத்தில் இப்படிப்பட்ட விவகாரங்கள் தலைதூக்குவதைப் பார்க்கிறோம். பிடிஎன் இதற்குக் காரணமாக இருக்குமோ.
பெண்டர்: பிடிஎன், அம்னோ/பிஎன் பரப்புரைகள்வழி ஆசிரியர்களிடையே இன வெறுப்பை விதைத்து வந்தால் இதுதான் நடக்கும். பிறகு ஆசிரியர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
அல்போன்சோ: விசாரிக்கவே தேவையில்லை. உண்மை எங்களுக்குத் தெரியும்.
பினாங்கு மக்கள்: 60-70களில் இப்படிப்பட்ட சம்பவங்களைப் பார்த்ததுமில்லை, கேளிவிப்பட்டதுமில்லை. புவாசா மாதத்தில் வகுப்பில், சிற்றுண்டி நிலையத்தில் சாப்பிடுவோம், தண்ணீர் குடிப்போம். முஸ்லிம் நண்பர்களுக்கு அது ஒரு பிரச்னையாக இருந்ததே இல்லை.
இன்று எவ்வளவு பிரச்னைகள். நாடு தாலிபான்களின் அரசாக மாறிக் கொண்டிருக்கிறதா? ஒரு மனிதனுக்கு அவனுடைய சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமானால் எதுவும் அவன் மனத்தை மாற்றவோ, குழப்பவோ முடியாது.
ம்ம்ம்ம்ம்ம்ம்: விசாரணை முடிவில் தகவலை வெளியிட்டவர்மீது குற்றம்சாட்டினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. சிலர் நோன்பின்போது, ‘வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்கும்’ என்பதை மறக்கிறார்கள். அதனால்தான் நோன்பின்போது பணிநேரம் குறைக்கப்பட வேண்டும் என்கிறார்கள். உணவகங்களை மூட வேண்டும் என்கிறார்கள், முஸ்லிம்- அல்லாதார் தங்கள் முன்னிலையில் உண்ணக்கூடாது, அருந்தக்கூடாது என்கிறார்கள்.
நோன்பிருப்பதே, உண்பதற்கு எதுவுமில்லாமல் வாடுகிறார்களே அந்த ஏழை மக்களின் பசியை உணர வேண்டும் என்பதற்காகத்தான் என்று நினைக்கிறேன்.
அந்த ஏழை மக்கள், தங்கள்முன் யாரும் சாப்பிடக்கூடாது எனக் கோருவதில்லை, பசி அதனால் வேலை செய்ய இயலாது என்றும் சொல்வதில்லை.
டோக்கிஸ்: இதைச் சொன்ன ஆசிரியர் பணி உயர்வு பெற்று வேறொரு பள்ளிக்குத் தலைமையாசிரியராக அனுப்பப்படுவார்.
எல்லாருக்குமாக பேசுவோன்: கமலநாதன் அவர்களே, ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறீர்களே, உண்மையா?
துணை அமைச்சரான உங்களை அறைந்த ஒரு சாதாரண மனிதனையே உங்களாலோ போலீசாராலோ எதுவும் செய்ய முடியவில்லையே.
எதையும் சொல்வதற்குமுன் சிந்திக்க வேண்டும் பாவம், நீங்கள் என்ன செய்வீர்கள். முஸ்லிம்-அல்லாதார் விவகாரம் என்றால் நீங்கள் சொல்வதற்கு என்றே கல்வி அமைச்சு ஒரு வாடிக்கையான பதிலைத் தயாரித்து வைத்திருக்கிறதே.
ஜென்2: ஒரு மூத்த ஆசிரியர் இப்படி மட்டமான புத்தியைக் கொண்டிருந்தால் கல்விமுறை குப்பை மேட்டை நோக்கிப் போவதில் வியப்பில்லை.
ஓவர்50: கொல்லைப்புறம் வழியே அமைச்சரான மசீச, கெராக்கான் கட்சியினர் எங்கே போனார்கள்? இந்த விவகாரத்தில் மெளனமாக இருப்பது ஏன்? கெடா மந்திரி புசார் என்ன சொல்லப்போகிறார்?
எக்ஸ்ரேஞ்சர்: ஆசிரியர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. முஸ்லிம்-அல்லாத மாணவர்களும் கடிதம் வரைந்த பெற்றோரும்தான் குற்றவாளிகளாக்கப்படுவார்கள். அதன் பின்னர் விசாரணை நடக்கும். சம்பவம் மறக்கப்படும்வரை விசாரணை தொடரும். கடந்த ஆண்டு மாணவர்கள் கழிப்பறையில் உணவு உண்ண வைக்கப்பட்ட சம்பவம் என்னவாயிற்று?
பேராக் பொலே: இன அமைதியைக் கெடுத்தார் என ஆசிரியர்மீது நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட வேண்டும்.
ஜஸ்டின் கோவ்: நோன்பிருப்பது நானும் நான் நம்பும் இறைவனும் சம்பந்தப்பட்ட விவகாரம். அதற்காக மற்றவர்களும் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளான உண்பதையும் நீர் அருந்துவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது நியாயமல்ல.
பறக்கும் கழுகு: ஆசிரியர் சொன்னது உண்மையானால் கல்வி அமைச்சு உடனடியாக அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். காரணம்: ஆசிரியராக இருக்க தகுதியற்றவர்.
டாக்: ரமலான் மாதம் வந்து விட்டது. இனி, தேசிய வகைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் இப்படிப்பட்ட மடத்தனங்கள் கொடி கட்டிப் பறக்கும்.
கல்வி அமைச்சும், வழக்கம்போல், விசாரிப்பதாக சொல்லும். விசாரணையில் எதுவும் தெரிய வராது. கல்வி அமைச்சரும் எதுவும் நடவாததுபோல் இருப்பார்.
KMD_1371466233: மஇகா, கெராக்கானின் “வீராதி வீரர்களே” எங்கே போய் விட்டீர்கள்? இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
முதலில் மலேசியன்: வகுப்பறையில் தண்ணீர் அருந்துவதில் என்னய்யா தப்பு? ஆசிரியர் என்ன பயங்கரவாதியா? ஐஎஸ்ஐஎஸ்-ஸுக்கு உதவ விரும்புகிறாரோ.


























ம இ காவுக்கு இதைக் கவனிக்க நேரம் இல்லையப்பா…… எலேக்க்ஷேன் வருதப்பா!!!!!!
மஇகா அப்படி என்றால் என்ன ? யார் தலைவர் , எங்கே இருக்கிறார் ?
என்றே தெரியவில்லை ! பிறகு எப்படி ???
இவனை தெர்தேடுந்த உழு சிலாங்கூர் மக்கள் , உங்களுக்கு வாழ்த்துக்கள்.
இவன் ஒரு சப்பி— சூடு சொரணை இல்லா பிண்டம்– அம்நோகாரன்களை முத்தமிட்டே பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஈன ஜென்மம்.
அங்கே யார் தான் தலைவன் என்று தெரியவில்லை . ஆனால் இரு அமைச்சர்களும் சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார்கள்