பிஏசி 1எம்டிபி தலைவர்களிடம் WSJ செய்தி பற்றி விசாரிக்கும்

jazபொதுக் கணக்குக்  குழு(பிஏசி) அதனிடம்  வாக்குமூலம்  அளிக்க வரும் 1எம்டிபி  நிர்வாகிகளிடம்  கடந்த  வாரம் வால்  ஸ்ட்ரீட்  ஜர்னலில்  வெளிவந்த  செய்தி  பற்றியும்  விசாரிக்கும்.

ஆனால், அதன்  தொடர்பில்  சாட்சியமளிக்க  இப்போதைக்கு  யாயாசான்  ரக்யாட்  1மலேசியா அதிகாரிகள்  உள்பட  புதிய  சாட்சிகளை  அக்குழு  அழைக்காது.

இப்போதைக்கு  பிஏசி, 1எம்டிபி-இன்  நிர்வாகம்மீது  கவனம்  செலுத்த  விரும்புவதாக  நூர்  ஜஸ்லான்  கூறினார். குறிப்பாக  நிதி  அமைச்சு, அதன்  தலைமை  செயல்  அதிகாரிகள், கணக்காய்வாளர்கள்,  இயக்குனர்கள்  ஆகியோரை  அது  விசாரணை  செய்யும்.

அதன்  பின்னர், தேவைப்பட்டால்  கூடுதல்  சாட்சிகள்  அழைக்கப்படுவார்கள்  என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.