கட்சியில் கிளர்ச்சி செய்பவர்கள் மூழ்கி மறைந்து போவார்கள்: ஹாடி எச்சரிக்கை

hadiபுதிய  கட்சி  அல்லது  அமைப்பில் புகலிடம்  தேடிச்  செல்லும்  பாஸ்  தலைவர்களும்  உறுப்பினர்களும்  “மூழ்கி மறைந்தொழிவார்கள்”  எனக்  கட்சித்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  எச்சரித்துள்ளார்.

பாஸ்  உறுப்பினர்களுக்கான  ஒரு  திறந்த  மடலில் அவர்  இந்த  எச்சரிக்கையை  விடுத்திருந்தார்.

“பாஸின்  வரலாறு  தெரிந்தவர்களுக்கு  அடைக்கலம்  நாடிச்  சென்ற  தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அவர்கள்  அடைக்கலம்  நாடிச்  சென்ற  கட்சியுடன்  அல்லது  அமைப்புடன்  மறைந்து போனதும் தெரியும்”, என்று  ஹாடி  கூறினார்.

பாஸில் பதவியைப்  பறிகொடுத்த  18 முற்போக்காளர்கள்  சேர்ந்து  ஒரு புதிய  அமைப்பை  உருவாக்கியிருப்பதைத்  தொடர்ந்து  அவர்  இவ்வாறு  எச்சரிக்கை  விடுத்துள்ளார்.

Persatuan Ummah Sejahtera Malaysia(பாஸ்மா) என்ற  அமைப்பு,  பக்கத்தான்  ரக்யாட்டில்  பாஸுக்குப்  பதிலாக  இடம்பெறும் நோக்கில்  விரைவில்  ஒரு  அரசியல்  கட்சியை  அமைக்கப்போவதாகவும்  அறிவித்துள்ளது.