அம்னோ உறுப்பினர்கள் டிஏபி கொடியை எரித்தனர்

flagபினாங்கு  அரசாங்க  அலுவலகம்  அமைந்துள்ள  கொம்டார்  கட்டிடத்தில்  டிஏபி  கொடி  ஒன்று தீ வைத்து  எரிக்கப்பட்டது.

பினாங்கு  அம்னோ  செயலாளர்  மூசா  ஷேக்  பாட்சிர்  தலைமையில்  50 அம்னோ  உறுப்பினர்களும்  ஆதரவாளர்களும்  மகஜர்  ஒன்றை  பினாங்கு  மாநகர்  மன்றத்திடம்  கொடுப்பதற்காகச்   சென்றபோது  அச்சம்பவம்  நடந்தது.

மாநகர்  மன்றம்  மினாரா  அம்னோவின்  அறிவிப்புப்  பலகையை இடித்துத்தள்ள  முடிவு  செய்ததற்குக்  கண்டனம்  தெரிவிக்கும்  வகையில் டிஏபி   கொடி  எரிக்கப்பட்டது.